Published:Updated:

கைவிலங்குடன் அழைத்துச் செல்ல வேண்டும் - இந்திரா காந்தியை வி.ஆர்.எல் கைது செய்தபோது நடந்தது என்ன?

எம்.குமரேசன்
கைவிலங்குடன் அழைத்துச் செல்ல வேண்டும் - இந்திரா காந்தியை வி.ஆர்.எல் கைது செய்தபோது நடந்தது என்ன?
கைவிலங்குடன் அழைத்துச் செல்ல வேண்டும் - இந்திரா காந்தியை வி.ஆர்.எல் கைது செய்தபோது நடந்தது என்ன?

மிழ்நாட்டில் நேர்மைக்கும் அதிரடிக்கும் பெயர் போன முன்னாள் டி.ஜி.பி, வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் மறைந்துவிட்டார். ஆனால், லக்ஷ்மி நாராயணன் ஆற்றிய சேவைகள் அளப்பறியாதது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக்கூட கைது செய்தவர் இவர். 

கைவிலங்குடன் அழைத்துச் செல்ல வேண்டும் - இந்திரா காந்தியை வி.ஆர்.எல் கைது செய்தபோது நடந்தது என்ன?

போலீஸ் துறையில் வி.ஆர்.எல் என்ற செல்லப் பெயருடன் வலம் வந்த லக்ஷ்மி நாராயணன் 1951-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிருஷ்ணய்யரின் சகோதரர். மதுரையில் உதவி கமிஷனராக வாழ்க்கையைத் தொடங்கிய வி.ஆர்.எல் 1985-ம் ஆண்டு தமிழ்நாடு டி.ஜி.பி ஆனார். தமிழ்நாடு போலீஸ் குடியிருப்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர். இவரின் மேற்பார்வையின் கீழ்தான் தமிழகத்தில் ஏராளமான போலீஸ் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, போலீஸார் ஒரே இடத்தில் வசிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. சி.பி.ஐ-யின் துணை இயக்குநராகவும் இருந்துள்ளார். அப்போதுதான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை வி.ஆர்.எல் கைது செய்தார்.

கடந்த 1977-ம் ஆண்டு எமர்ஜென்சி முடிந்து ஜனதா அரசு அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமராக ஆனார். உள்துறை அமைச்சராக சரண்சிங் இருந்தார். எமர்ஜென்சியில் அத்வானி, வாஜ்பாய், மொரார்ஜி உள்ளிட்ட தலைவர்களை இந்திரா சிறையில் அடைத்தார். ஜனதா அரசு பதவியேற்றதும் ஜன்சங்கத்தின் தலைவர் நானாஜி தேஷ்முக் பிரதமர் மொரார்ஜியை இந்திரா கைது செய்தே ஆக வேண்டுமென்று வற்புறுத்திக்கொண்டிருந்தார். முடிவில் அக்டோபர் 30-ம் தேதி இந்திராவைக் கைது செய்யச் சென்ற குழுவில் இருந்த  வி.ஆர்.எல்-லிடம், ' கைது செய்ய வந்துள்ளீர்கள், ஆனால், கை விலங்கு எங்கே' என்று இந்திரா கேட்டார். `என்னைக் கைது செய்தால் கைவிலங்குடன்தான் அழைத்துச் செல்ல வேண்டும்' எனவும்  இந்திரா வாதிட்டார். பதிலளித்த வி.எல்.ஆர். 'கை விலங்கு எடுத்து வர மறந்துவிட்டேன் ' என்று  சிரித்தபடியே கூறினார். கைது செய்யப்பட்ட இந்திரா, உள்துறை அமைச்சர் சரண்சிங் பிரதமர் மொரார்ஜிக்கு கொடுத்த நெருக்கடியால் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார்.  பிற்காலத்தில்  தன்னைக் கைது செய்த வி.ஆர்.எல் செய்த சேவைக்கு இந்திரா காந்தியே தன் கையால் இரு பதக்கங்களை அவருக்கு அணிவித்தது தனிக் கதை. 

கைவிலங்குடன் அழைத்துச் செல்ல வேண்டும் - இந்திரா காந்தியை வி.ஆர்.எல் கைது செய்தபோது நடந்தது என்ன?

ஓய்வுக்குப் பிறகு வி.ஆர்.எல், ஜூனியர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். வி.ஆர்.எல். மறைவு குறித்து சென்னை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில்,  ' ஊழல் வழக்கில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டார். நான் உட்படப் பல போலீஸ் அதிகாரிகள் இக்கட்டான சூழலில் அவரிடத்தில் ஆலோசனைகள் கேட்போம்  '  என்றார். மறைந்த வி.ஆர்.எல்-லுக்கு சுரேஷ் என்ற மகனும் உஷா, ரமா என்ற இரு மகள்களும் உள்ளனர். நாளை அண்ணா நகரில் அவரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.