Published:Updated:

தங்கம் வென்ற பிறகு ட்விட்டரில் இணைந்த கோமதி மாரிமுத்து!

ஆ.சாந்தி கணேஷ்
தங்கம் வென்ற பிறகு ட்விட்டரில் இணைந்த கோமதி மாரிமுத்து!
தங்கம் வென்ற பிறகு ட்விட்டரில் இணைந்த கோமதி மாரிமுத்து!

டந்த சில நாள்களாக இந்தியாவெங்கும் உச்சரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர் கோமதி மாரிமுத்து. தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். சாதாரண விவசாயக் குடும்பம். அதனால் வசதி இல்லை, அப்பாவும் இல்லை. ஆனால், கோமதியிடம் ஓட்டத்தில் அபார திறன் இருந்தது; நிறைய தன்னம்பிக்கை இருந்தது. கடந்த 10 வருடங்களாகக் கோமதியின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றிதான் இந்தத் தங்கப் பதக்கம். போதிய பேருந்து வசதிகூட இல்லாத, திருச்சியை அடுத்த முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதியை இன்று மீடியாக்களும் சமூக வலைதளங்களும் 'தங்கம் வென்ற தமிழச்சி' என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 

படிப்பு, ஓட்டப்பந்தய பிராக்டிஸ், கூடவே குடும்பத்துக்காக இன்காம்டாக்ஸில் வேலை என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற கோமதி, சோஷியல் மீடியாக்களில் இருந்தெல்லாம் ஒதுங்கியே இருந்திருக்கிறார். 22-ம் தேதி தோஹாவில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற பிறகுதான் (அப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட நள்ளிரவு) தன் ட்விட்டர் கணக்கையே ஆரம்பித்திருக்கிறார். ஜஸ்ட் 4 நான்கு நாள்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சமூக வலைதளம்தான், தற்போது கோமதி மாரிமுத்துவை நிமிடத்துக்கு நிமிடம் வாழ்த்துகளால் நனைய வைத்துக்கொண்டிருக்கிறது.