Published:Updated:

அதர்வா நடிக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

உ. சுதர்சன் காந்தி.

`செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

அதர்வா நடிக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
அதர்வா நடிக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

`பாணா காத்தாடி' படத்துக்குப் பிறகு, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் `செம போத ஆகாதே'. இந்தப் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளிவராமலே இருந்தது. இந்நிலையில், இந்தப் படம் வரும் மே 18ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அதர்வா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, `பூமராங்', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' ஆகிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. `பாணா காத்தாடி' படத்துக்குப் பிறகு இணைந்துள்ள இந்தக் கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.