Published:Updated:

'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவிதான் என் இன்ஸ்பிரேஷன்' - 'பலூன்' நாயகி ஜனனி ஐயர்!

வே.கிருஷ்ணவேணி
'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவிதான் என் இன்ஸ்பிரேஷன்' - 'பலூன்' நாயகி ஜனனி ஐயர்!
'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவிதான் என் இன்ஸ்பிரேஷன்' - 'பலூன்' நாயகி ஜனனி ஐயர்!


'பிக் பாஸ்' புகழ் ஓவியா அந்த நிகழ்ச்சியில் பாடிய 'கொக்கு நெட்டக் கொக்கு...' பாடலை 'பலூன்' படத்தின் புரொமோஷனுக்குப் பயன்படுத்தப்போவதாக அந்தப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 'பலூன்' படத்தில் நடித்து வரும் ஜனனி ஐயரும் அந்தப் படத்துக்கான மீண்டும் ஒரு புதிய விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். 


வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாகவிருக்கும் 'பலூன்' படத்தில், ஜெய், அ ஞ்சலி, ஜனனி ஐயர் போன்றோர் நடித்துள்ளனர். 'தெகிடி' போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த ஜனனி ஐயருக்கு இந்தப் படம் பெரிய ரீச் தரக்கூடியதாக இருக்கும் என்று ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனனி ஐயர் பேசியபோது, 'என்னுடைய கதாபாத்திரம் கொண்ட கதையானது முழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. 


இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் 'மூன்றாம் பிறை' ஶ்ரீதேவி மேடத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும். கலாசாரமிக்க ஒரு குடும்பத்தில் வளரும் ஒரு பெண் காதலிக்கும்போது உருவாகும் பிரச்னை மற்றும் அதனால் அந்தப் பெண் படும் பாடுகள்தான் கதை. இந்தப் படத்துக்கான ரெஃபரன்ஸை ஶ்ரீதேவி மேடத்தின் ரோலை ஞாபகம் வைத்துதான் நடிக்கவே செய்தேன். இன்னும் சொல்லப்போனால் அவங்க படங்களிலிருந்து நிறைய விஷயத்தைக் கத்துக்கிட்டேன்' எனவும் சிலாகிக்கிறார் ஜனனி ஐயர்.