Published:Updated:

மதுரை: `6 மாத சம்பளமே வேண்டாம்!' - காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.

இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரம்பக்கோரி, சுமார் 100 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கொடுத்தனர்.

மதுரை: `பிரசவத்துக்கு இலவசம்;  சேவைக்கு அபராதம்?’ - வைரலான ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ

2019-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம்நிலைக் காவலர் தேர்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 8,888 காலியிடங்கள் நிரப்பப்பட்டது. 2020-2021 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்தார். தற்போது கொரோனா காலகட்டமாக இருப்பதால், 2019-ம் ஆண்டு தேர்ச்சிபெற்று பணிவாய்ப்பை இழந்த சுமார் 10,000 பேருக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி, 2019-ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.
காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.

கலெக்டரிடம் புகார் கொடுத்த சக்திவேல், “கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் வேலை பார்த்துவருகிறார்கள். இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பினால் அவர்களுக்கு பணிச்சுமை குறையும். இப்போது இருக்கும் கொரோனா சூழலில், காவலர் தேர்வு வைப்பது என்பது கடினமான காரியம். அதனால், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்ச்சிபெற்ற எங்களைப் தற்போது பணியமர்த்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நாங்கள், 2019-ம் ஆண்டு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்தையும் முடித்து சான்றிதழ் பெற்றவர்கள்.

மதுரை: கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழைமையான சதி கற்கள்!

அன்றைய சூழலில் காலிப்பணியிடம் குறைவாக இருந்ததால் எங்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது எங்களைப் பணியமர்த்தினால், 6 மாத பயிற்சி கால சம்பளம் எங்களுக்கு கொடுக்க வேண்டாம். கொரோனா காலத்தில் சேவை செய்ய தயாராக இருக்கிறோம். எங்களைப் போல, மாவட்டம்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறோம். அனைத்து தகுதியும் உள்ள எங்களைப்பற்றி அரசுதான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு