Published:Updated:

`விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பிய இளைஞர்!' -ஊரடங்கில் எடுத்த விபரீத முடிவு

மரணம்
மரணம் ( மாதிரிப் படம் )

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ளனர். அதனால் குடும்பங்களில் பிரச்னைகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில் திருமணம் செய்யாமல் விதவைப் பெண் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் சகோதரான ஸ்ரீபெரும்புதூர் கருமாங்கழனி, கக்கன்தெருவைச் சேர்ந்த பாரதி செல்வன், குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் போஸ்ட் கானூர். எனக்குத் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். என்னுடன் ஒரு அக்கா, ஒரு தங்கை, தம்பி சதீஷ்குமார் ஆகியோர் பிறந்தனர். எனது சொந்த ஊரில் அப்பா ஜெயபாலன் மட்டும் குடியிருந்து வருகிறார்.

ஊரடங்கு
ஊரடங்கு
representational image

எனது தம்பி சதீஷ்குமார், சென்னை கே.கே.நகரில் உள்ள மேன்ஷனில் சூப்பர் வைஸராகப் பணியாற்றிவந்தார். மாதம் ஒருமுறை எங்களை வந்து பார்த்துச் செல்வார். இந்தநிலையில் ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஒரு பெண்ணுடன் சதீஷ்குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் விதவைப் பெண்ணான அவரை திருமணம் செய்துகொள்ள சதீஷ்குமார் முடிவு செய்தார். ஆனால் அதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதால் வீட்டின் உரிமையாளர் எனக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு, உங்கள் தம்பியை வந்து அழைத்துச் செல்லுமாறு தகவல் கூறினார். திடீரென 29.4.2020-ம் தேதி காலை 8 மணியளவில் எனக்கு போன் மூலம் கிடைத்த தகவலில் எனது தம்பி சதீஷ்குமார், தூக்குப்போட்டு கொண்டதாக தகவல் கிடைத்தது.

`அவர் செய்த தவற்றை மறைக்க' - சென்னைக் காவலர் குறித்து ஆசிரியை எழுதிய 1 பக்க அதிர்ச்சிக் கடிதம்

அதனால் அங்கு சென்றபோது சதீஷ்குமார், இறந்தது தெரியவந்தது. எனது தம்பி திருமணமாகாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். எனவே எனது தம்பியின் சடலத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குபதிந்து விசாரித்துவருகிறார்.

இதுகுறித்து குமரன்நகர் போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்த சதீஷ்குமாருக்கு வயது 26. அவருக்குத் திருமணமாகவில்லை. இந்தச் சமயத்தில்தான் விதவைப் பெண் ஒருவருடன் சதீஷ்குமாருக்குப் பழக்கம் ஏற்பட்டு அவரின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். அந்தப் பெண்ணை சதீஷ்குமார் திருமணம் செய்ய விரும்பியபோது ஏனோ அந்தப் பெண் அதற்கு சம்மதிக்கவில்லை.

`திருமணமான அன்றே சுயரூபம் தெரிந்துவிட்டது..' - சென்னைக் காவலரால் விபரீத முடிவெடுத்த மனைவி

அதனால் ஏற்பட்ட மனவிரக்தியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணிடமும் சதீஷ்குமார் மரணம் குறித்து விசாரித்துவருகிறோம். அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். இதற்கிடையில் சதீஷ்குமாரின் சகோதரர் அளித்த புகாரில் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்" என்றனர்.

விதவைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க விரும்பிய இளைஞர் ஊரடங்கு காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு