Published:Updated:

சென்னை: `காதலியைப் பார்க்க வந்த காதலன்’ - 75 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம்

கிணற்றுக்குள் விழுந்த காதலன்
கிணற்றுக்குள் விழுந்த காதலன்

ஊரடங்கால் காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன், பின்பக்கச் சுவரை ஏறிக் குதித்து காதலியின் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது திருடன், திருடன் என்று பக்கத்து வீட்டினர் விரட்டியதால் 75 அடி ஆழக் கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்தார்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா (பெயர் மாற்றம்) 22 வயதான ராஜா டிப்ளோமா படித்துள்ளார். இவர், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலைபார்த்து வருகிறார். செல்போன் கடைக்கு வந்த கல்லூரி மாணவிக்கும் ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் ஊரடங்குக் காரணமாக நேரில் சந்திக்க முடியாமல் இந்தக் காதல் ஜோடி தவித்தது. இந்தநிலையில் நண்பனின் பிறந்தநாள் விழாவுக்காகக் காதலி குடியிருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார் ராஜா. பிறந்தநாள் முடிந்து திரும்பி வந்தபோது காதலிக்கு போன் செய்த ராஜா, நான் உன்வீட்டின் அருகில்தான் நிற்கிறேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காதலன் ராஜா
காதலன் ராஜா
சென்னை: `அந்த ஆடியோ உண்மை கிடையாது’ - உதவி இன்ஜினீயர் விவகாரத்தில்  கல்லூரி மாணவி

அதற்கு காதலியும் வீட்டுக்கு வந்தால் என்னைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். உடனே காதலியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் காதலியின் வீட்டின் பின்பக்க சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றார் ராஜா. இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் சுவர் ஏறிக் குதிப்பதாகக் கருதிய அந்தப் பகுதி மக்கள் திருடன்... திருடன் என்று விரட்டியுள்ளனர். அதனால் பயந்துபோன ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது அந்தப் பகுதியிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் ராஜா. திருடனைப் பிடிக்க முடியாததால் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த ராஜா, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனச் சத்தம் போட்டுள்ளார். காதலியின் வீட்டினர் சத்தம் கேட்டு கிணற்றுப் பகுதிக்கு வந்தனர். டார்ச் லைட்டைக் கிணற்றுக்குள் அடித்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த காதலிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காதலன்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காதலன்
`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி ராஜாவை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது காதலியைப் பார்க்க வந்த தகவல் அனைவருக்கும் தெரிந்தது. 75 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ராஜாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த தகவல் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு