வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (05/03/2018)

கடைசி தொடர்பு:17:26 (05/03/2018)

''உடல் வளைவு, நெளிவுகளைப் பற்றி ஐ டோன்ட் கேர்!'' - நட்சத்திரா #AcceptTheWaySheIs

'பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' அல்லது 'பெண் இப்படியெல்லாம் இருக்கக் கூடாது' என்று சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்து, பாலின வரையறைகளைக் கடந்து, அவளை அவளாக, சக உயிராக ஏற்றுக்கொள்ளச் சொல்லும் பெண்கள் வாழும் காலம் இது. இதோ மகளிர் தினத்தையொட்டி சவால்கள் பல சந்தித்த சில பெண்கள், இன்றைக்கும் சமூகத்தில் இருக்கும் தடைகளை, தங்கள் கருத்துகளால் உடைத்தெறிகிறார்கள்... பெண்களின் உடல், தங்களின் கண்களுக்கு இனிமை அளிக்கும்படி வளைவு நெளிவுகளுடன் இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் எதிர்பார்ப்பின் தலையில், 'நறுக்' எனக் குட்டுவைப்பது போல, 'என் உடலின் வளைவு நெளிவுகள் பற்றி ஐ டோன்ட் கேர்!' என்கிறார், பிரபல தொகுப்பாளர், நட்சத்திரா.

நட்சத்திரா

''ஒரு பொண்ணுன்னா இந்த வயசுக்குள்ளே கல்யாணம் பண்ணிக்கணும்; இந்த வயசுக்குள்ளே குழந்தையைப் பெத்துக்கணும் என்கிற கட்டுப்பாடுகள் இப்போ குறைஞ்சு இருக்கு. என் வீட்டையே எடுத்துக்குங்க. என் அம்மா அவங்களின் சின்ன வயசில் 'தான் ஒரு ஆங்கர் ஆகணும்'னு சொல்லியிருந்தால், பெரிய இஷ்ஷு ஆகி இருக்கும். ஆனால், இப்போ அது இயல்பாகி இருக்கு. எனக்கு அம்மாவின் சப்போர்ட் இருந்ததால், ஈஸியா இந்த ஃபீல்டுக்குள் வரமுடிஞ்சது. எனக்குக் கல்யாணமாகி ஒரு பொண்ணு பொறந்தா, அவளுக்கு என்னைவிட ஃபிரீடம் கிடைக்கும். இப்படித்தான் சொஸைட்டியில் பெண்களுக்கான ஃபிரேம் விரிவடையும். இது மட்டும்தான் பாஸிட்டிவான விஷயமா படுது. பட் இதுவும் வீடு சார்ந்த விஷயந்தானே தவிர, இந்தச் சமூகம் சார்ந்த விஷயம் கிடையாது'' என்று படு போல்டான ஓப்பனிங் கொடுக்கும் நட்சத்திராவின் அடுத்தடுத்த வார்த்தைகளில் கத்தியின் கூர்மை.

ஆங்கர்

''இங்கே ஒரு பெண்ணின் உடம்பு, ஆண்களின் பார்வைக்கு அழகா தெரிஞ்சாலும் சரி, தெரியலைன்னாலும் சரி, வல்கர் கமென்ட் அடிச்சுடறாங்க. இன்னமும் ஒரு பெண் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய படத்தை போட்டுட்டு, ஒரு மட்டமான கமென்ட்டையாவது பார்க்காமல் கடந்துட முடியலை. ஆண்கள் நிறையப் பேர் இருக்கும் இடத்தை ஒரு பெண் கிராஸ் பண்ணும்போது, அந்தப் பெண்ணின் திறமை என்ன; குணங்கள் என்ன எனத் தெரிஞ்சுக்கிறது முன்னாடி, அவளை டாப் டு பாட்டம் பார்த்துடறாங்க. ஆண்களின் இந்தப் போக்குக் கண்டிப்பா மாறியே ஆகணும். ஏன்னா, நாங்க ஆண்களின் திறமையையும் குணத்தையும்தானே பார்க்கிறோம். இதை அவங்களும் பெண்கள் விஷயத்தில் ஃபாலோ பண்றதுதானே நியாயம்? அப்கோர்ஸ்... பண்ணணும்'' என்று அழுத்தமாகப் பேசும் நட்சத்திரா, அழகுப் பற்றிய அளவீடுகளையும் உடைத்தெறிகிறார்.

தொகுப்பாளினி

''ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வாங்கும்போதுதான், அதற்குத் தேவையான ஷேப்பில் இருந்தார். அவரே தாயாகியபோது அந்த அழகியல்களை பிரேக் பண்ணினார். ஆனால், சொஸைட்டி அவரை அழகியாவே, மிஸ் வேர்ல்டு டைட்டில் வின் பண்ணினப்போ இருந்த அளவுகளிலேயே எதிர்பார்க்கிறது நியாயமா? யெஸ், நானும் கேமரா முன்னாடி என்னை அழகா பிரசன்ட் பண்ணிக்கும் வேலையில்தான் இருக்கேன். கேமராவுக்கு முன்னாடி வயிறு ஃபிளாட்டாக இருந்தால் அழகா இருக்கும்தான். அதுக்காக, எப்போதும் அப்படியே இருக்க முடியுமா? வாழ்கிற காலம் முழுக்க ஒரு பொண்ணு அழகாத்தான் தெரியணும் என்றால், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் உடம்பை மெயின்டெய்ன் பண்றதுக்கே சரியா இருக்கும். ஸோ, நம்ம உடம்பு வளைவு நெளிவோட இருக்கணுமா, ஹெல்தியாக இருக்கணுமா என்பதைப் பெண்களாகிய நாம்தான் முடிவுப் பண்ணணும். இந்த விஷயத்தில் ஆண்களின் கமென்ட்ஸ் ஒர்த் கிடையாது லேடீஸ்!''

தொகுப்பாளர் நட்சத்திரா சொல்லியிருப்பதைப்போல, 'பெண்ணுக்கான வரையறைகளைத் திணிக்காமல் என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயத்தை #AcceptTheWaySheIs என்ற ஹேஷ்டேக்குடன் நீங்களும் பதிவுசெய்யுங்கள் தோழிகளே..! 

 


டிரெண்டிங் @ விகடன்