'தேவராட்டம்' ஆட ரெடிண்ணே! - 'முள்ளும் மலரும்' முனீஸ் ராஜா

'தேவராட்டம்' படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் முனீஸ் ராஜா

'நாதஸ்வரம்' தொடரில் காமெடி கேரக்டரில் வந்து பிரபலமானவர் முனீஸ்ராஜா. நடிகர் சண்முகராஜனின் தம்பி. திடீரென அதிர்ஷ்டம் அழைக்க, 'முள்ளும் மலரும்' தொடர் மூலம் சீரியல் ஹீரோ ஆனார். ஆனாலும் சினிமாவில் ரவுண்ட் வர வேண்டுமென்பதே ஆசை.

'அண்ணன் மாதிரியோ இல்லாட்டி, காமெடியிலாவது சினிமாவுல இருக்கணும்ணே' எனச் சொல்லி வந்தவருக்கு, சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்கள் அமைந்தன. அவற்றில் திருப்தி இல்லாமல் இருந்தவருக்கு மறுபடியும் அதிர்ஷ்டம். கௌதம் கார்த்திக், சூரியுடன் 'தேவராட்டம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முனீஸ் ராஜா

அவரிடம் பேசினோம். ''மூணு அக்காக்களுக்கு ஒரேயொரு தம்பியா கௌதம் கார்த்திக் நடிக்க, அவரோட அக்கா புருஷங்களா நான், சூரி அண்ணன், போஸ் வெங்கட் சார் நடிக்கிறோம். மாப்ள, சகலைகளோட ஷூட்டிங் செமயா போயிட்டிருக்கு. மாப்ள மச்சான் கச்சேரின்னாலே மதுரையைத் தாண்டி வேற எந்த ஊரு சிறப்பா இருக்கும்ணே, ஷூட்டிங் அங்கதான். ஆனா ஸ்பாட்ல ஆரம்பத்துல சில நாள்கள் கொஞ்சம் கூச்சப்பட்டுட்டு பேசாமலேயே இருந்தேன். 'கவுந்தடிச்சிக் கிடக்கிறவன் எப்படி காமெடி நடிகனா இருக்க முடியும்'னு ரைமிங்லாம் பேசி என்னை எல்லாருடனும் மிங்கிள் ஆக வச்சிட்டார் சூரி அண்ணன்'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!