விஜய் கொண்டாட்டம்! திருச்சியில் திரண்ட டி.வி பிரபலங்கள்

சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்களை நேரில் கண்டு ஆட்டோகிராஃப், செல்ஃபி எடுத்துக்கொள்வது சென்னைவாசிகளால் முடியும். தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லை. எனவே, அவர்களுக்காகவே சேனல்களால் அவ்வப்போது 'நட்சத்திர இரவு' மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், நேற்றைய தினம் (5/8/18) திருச்சி ரசிகர்களை மகிழ்விப்பதற்கென்றே அங்கு நடந்தது விஜய் டி.வி நடத்திய 'விஜய் கொண்டாட்டம்' நிகழ்ச்சி.

விஜய் கொண்டாட்டம்

விஜய் டி.வி-யின் ஆஸ்தான ஆங்கர்களான பிரியங்கா, ஜாக்குலின், ரக்‌ஷனுடன் 'சூப்பர் சிங்கர்' ஷோவில் வென்றவர்கள், 'ஜோடி'யில் நடனமாடியவர்கள்' மற்றும் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எனத் திரளாகக் கலந்துகொண்ட விஜய் டி.வி பிரபலங்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

விஜய் டி.வி தரப்பில் பேசியபோது, 'சென்னையைத் தாண்டி மற்ற பகுதிகள்ல எங்களது சீரியல், ரியாலிட்டி ஷோக்களைப் பார்த்து ஆதரவு தர்ற மக்களுக்கு, எங்களால செய்ய முடிஞ்சது இந்த மாதிரியான ஷோக்கள்தான். அவங்களோட அபிமான நட்சத்திரங்களை அவங்ககிட்ட கூட்டிட்டுப் போறப்ப, அவங்க அடைகிற சந்தோஷம் பெரியது. அதனால, இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியா மற்ற நகரங்கள்லயும் நடத்தலாம்னு இருக்கோம்' என்கிறார்கள்.

இந்த ஷோக்களில் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!