ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் மஹத்..! | mahat evicted from bigg boss with red card

வெளியிடப்பட்ட நேரம்: 07:01 (26/08/2018)

கடைசி தொடர்பு:09:33 (26/08/2018)

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் மஹத்..!

’மங்காத்தா’ ஆடிய மஹத் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போதே ’நிச்சயம் இப்படித்தான் நடக்கும்’ என யூகித்திருக்கலாம் சிலர். கடைசியில் அது நடந்தே விட்டது. யெஸ், ‘ரெட் கார்டு’ கொடுத்து மஹத்தை வெளியேற்றியிருக்கிறார் பிக் பாஸ். (இன்று இரவு எபிசோடில் காணலாம்)

மகத்

நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் மகத்தைத் தாளித்ததை வைத்தே இன்று வெளியேறுவது மஹத் தான் என்கிற தீர்மானத்துக்குப் பலரும் வந்து விட்டார்கள். ஆனாலும் கடந்த சில வாரங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிரான வெளியேற்றங்கள் நிகழ்ந்ததால் எதுவும் நடக்கலாம் என நினைத்தவர்களும் உண்டு. ’வில்லங்கம் செய்து வருகிறவர்கள் வீட்டுக்குள் இருந்தால் ரேட்டிங் பிரச்னை இருக்காது’ எனக் கிளம்பிய பேச்சுக்களைக் கேட்டிருக்கிறோம் தானே?

ஆனால் மும்தாஜ், டேனியுடனான எல்லை மீறிய விளையாட்டுகளும் சேட்டைகளுமே மஹத்தை வெளியேற்றியிருக்கின்றன. ‘ஆட்டத்தைத்தை தப்பாக ஆடி விட்டீர்கள் மஹத்; தப்பான ஆட்டம் ஆடியவர்களுக்கு ரெட் கார்டு தருவதே சரியான தீர்ப்பாக இருக்க முடியும்’ என்றபடி வசமான குறும்படம் ஒன்றையும் போட்டுக் காட்டி, அனுப்பியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஷோவில் யாஷிகாவுடன் காட்டிய நெருக்கத்தால் மஹத்தின் காதலி பிரச்சியும் மனம் உடைந்து ’இனி மஹத் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ எனச் சொல்லி விட்டார். கெட்ட பெயரிலிருந்து மீண்டு, காதலியையும் மீட்க என்ன செய்யப் போகிறார் மஹத்?