மேலும் ஐந்து நாள்கள் நீட்டிக்கப்படுகிறது பிக் பாஸ் 2!

`ஒரு வீடு, 100 நாள்கள், 16 போட்டியாளர்கள்.. நல்லவர் யார், கெட்டவர் யார்?’ என்கிற பரபரப்பான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 2.

பிக்பாஸ்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பதினாறு போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். அமர்க்களமாகச் சென்ற ஷோவில் எவிக்‌ஷன் பிராசஸ் தொடங்கியதும் முதல் ஆளாக வெளியேறினார் மமதி சாரி. தொடர்ந்து, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், ஷாரிக், நித்யா, வைஷ்ணவி, ரம்யா, மகத் எனப் பட்டியல் நீண்டு தற்போது டேனி வரை வெளியேறியிருக்கிறார்கள். மகத் புதுவிதமாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பாலாஜி, சென்றாயன், மும்தாஜ், ரித்விகா, ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏழு பேர் உள்ளே இருக்கிற சூழலில், சில தினங்களுக்கு முன் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. அடுத்த சில நாள்களில் மேலும் சிலர் இதுமாதிரி செல்லக் கூடுமென்றும் தெரிகிறது. ஷோ தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 3) 79 நாள்கள் முடிவடைகின்றன. கடந்த வாரம் ஷோவிலேயே 'க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்' எனச் சொல்லியிருந்தார் கமல். திட்டமிட்டபடி 100 நாள்கள் என்றால், ஷோ இம்மாதம் (செப்டம்பர்) 24-ம் தேதி முடிவடைய வேண்டும்.

ஆனால் தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்கள் ஷோ மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட இருப்பதாகச் சொல்கின்றன. அதாவது செப்டம்பர் 30-ம் தேதி வரை பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. 'டைட்டில் வென்றவரை மட்டும் தனியாளாக ஒருவாரம் அந்த வீட்டுக்குள் உட்கார வச்சிருப்பாங்களா' என்று கேட்கிறீர்களா? 'நூறு நாள்களின் ஹைலைட்ஸ் ப்ளஸ் சில விஷயங்கள் இருக்கும் என்கிறது' அந்த சோர்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!