`பேசுறவங்க ஆயிரம் காரணம் சொல்லலாம்'- 'ராஜா ராணி' யிலிருந்து வெளியேறிய கீதாஞ்சலி!

'' 'நாதஸ்வரம்' சீரியலில் மகா என்கிற கேரக்டர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. அந்தத் தொடர் நிறைவுபெற்றதும், வேறு சில சீரியல்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்துவந்தவருக்கு, நீலிமா ராணி தயாரித்த 'நிறம் மாறாத பூக்கள்' தொடரில் நிலையான ஒரு கேரக்டர் கிடைத்தது. அதில் நடித்துக்கொண்டிருக்கும்போதேதான் 'ராஜா ராணி' தொடருக்கும் கமிட் ஆனார். இந்த நிலையில், கமிட் ஆகி மூன்று மாதங்களே ஆன நிலையில், இப்போது 'ராஜா ராணி'யிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

என்ன காரணமாம்?

கீதாஞ்சலி

'கேரக்டருக்கு அவங்க முகம் பொருந்திப் போகலை' என்றே யூனிட்டில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது.

கீதாஞ்சலியிடமே பேசினேன். ''பேசுறவங்க ஆயிரம் காரணம் சொல்லலாம். அதுபத்தி எனக்குக் கவலையில்லை. ஷூட்டிங் தேதிகள்ல பிரச்னையானதாலதான் நான் வெளியேற வேண்டியதாகிவிட்டது. ரெண்டு சீரியல்ல நடிக்கிறப்ப இந்த மாதிரி பிரச்னைகள் வரும்கிறது தெரிஞ்சுதான், ஆரம்பத்துல தெளிவா பேசிட்டு கமிட் ஆனேன். ஆனா திடீர்னு, 'நிறம் மாறாத பூக்கள்' தொடருக்கு தேதிகள் கேட்கிறப்ப, என்னை அனுமதிக்கலை. கேட்டா வாக்குவாதமே மிஞ்சியது. வாக்குவாதம் பண்ணிட்டிருக்கிறதுக்கு... வெளியேறிடறது நல்லதில்லையா? அதான், தொடர்ல இப்ப நான் இல்லைனு ஆகிடுச்சு'' என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!