மீண்டும் ஐஸ்வர்யா சேஃப்... பிக்பாஸிலிருந்து வெளியேறியது யார்? #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் மும்தாஜ்.

பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட வேளையில் ஒவ்வொரு வார எவிக்‌ஷனும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் வைக்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ஐஸ்வர்யாவை பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்றாயனை அனுப்பினார்கள். அதே சமயம் ஷோ பார்க்கிற மக்கள் அவ்வளவு பேரும் ஓட்டளிப்பதில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார் கமல்ஹாசன். தன்னிடம் ரெட் கார்டு வாங்கிய ஐஸ்வர்யா எப்படித் தப்பித்தார் என ஒரு சார்ட்டையும் போட்டுக் காண்பித்தார். கூடவே ஐஸ்வர்யாவை அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட்டும் செய்தார்.

  மும்தாஜ்

சரி இந்த வார விஷயத்துக்கு வருவோம். இந்த வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி, ரித்விகா என நான்கு பேர் எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆகியிருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் மும்தாஜ். (நாளை 16.9.2018 இரவு எபிசோடில் காணலாம்) 

`என்ன மக்களே இந்த வாரமும் ஓட்டுப் போடலையா’ என்கிற எக்கோ இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டது. பொறுமையுடன் நாளை இரவு வரை காத்திருப்போம். கமல் என்ன காரணம் சொல்கிறார் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!