மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் டைட்டில் வென்றது யார்? #MrAndMrsKhiladisSeason2 | siddarth -priya pair won mr and mrs killadis title

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (16/09/2018)

கடைசி தொடர்பு:11:38 (16/09/2018)

மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் டைட்டில் வென்றது யார்? #MrAndMrsKhiladisSeason2

மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் -டைட்டில் வென்றது சித்தார்த் - ப்ரியா ஜோடி

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிற ரியாலிட்டி ஷோ ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ், சீசன் 2ல் டைட்டில் வென்றிருக்கிறது சித்தார்த் – ப்ரியா ஜோடி.

சித்தார்த்

உயரமான இரு கட்டடங்களை ஒற்றையடிப் பலகை வழியாக சைக்கிளில் கடப்பது, பாம்பு, பல்லிகள் அடைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்து கீ செயினைத் துலாவி எடுப்பது போன்ற ரிஸ்கான டாஸ்குகள் தரப்பட்டாலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முடித்து டைட்டில் வென்றுள்ளார்கள் இவர்கள்.

டிவி பிரபலங்கள் தம்பதி சகிதமாக கலந்து கொண்ட இந்த ஷோவுக்கான ஷூட்டிங் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது

சித்தார்த் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பரவலாக கவனம் பெற்றவர்.  தற்போது ஒளிபரப்பாகி வரும் `றெக்க கட்டிப் பறக்குது மனசு’ தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அழகிய தமிழ் மகன்’ ஷோவிலும் டைட்டில் வென்றவர். பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த போது உடன் பணியாற்றிய ப்ரியதர்ஷினியைக் காதலித்துக் கரம் பிடித்தார்.