வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (22/09/2018)

கடைசி தொடர்பு:16:43 (22/09/2018)

பிக் பாஸ் 2 - இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? #BiggBossTamil2

`பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேரில் ஒருவராக வெளியேறியுள்ளார், அந்த வீட்டில் ஒரேயொரு ஆண் போட்டியாளராக இதுவரை தாக்குப் பிடித்து வந்த பாலாஜி..

பாலாஜி

ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகிவிட, யாஷிகா ஆனந்த், பாலாஜி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய ஐந்து பேரும் இந்த வார எவிக்‌ஷன் பட்டியலில் இருந்தார்கள். இவர்கள் வாங்கிய ஓட்டுக்களின் அடிப்படையில், இந்த வார எவிக்‌ஷன் புராசஸ் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டு, இரண்டு பேரில் ஒரு ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார் பாலாஜி. (இன்றைய எபிசோடில் (22.9.18)  காணலாம்)

பாலாஜிக்கும் அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த சூழலில், இருவருமே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதால் ஆரம்பத்தில் ஒருவித எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சில வாரங்களில் நித்யா எவிக்‌ஷன் ஆகி வெளியில் வந்து விட்டார். ஆனால் ஷோவில் நீடித்து வந்த பாலாஜி தற்போது வெளியேறியுள்ளார்.