வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (22/09/2018)

கடைசி தொடர்பு:11:21 (24/09/2018)

எதிர்பார்க்கப்பட்ட டைட்டில் வின்னரும் அவுட்! #BiggBossTamil2

ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி, பாலாஜி, யாஷிகா என ஐந்து பேர் எவிக்‌ஷன் லிஸ்டில் இருந்த ‘பிக் பாஸ்’ சீசன் இரண்டின் கடைசி வார எவிக்‌ஷன் புராசஸ் நிறைவடைந்துவிட்ட நிலையில், யாஷிகா ஆனந்த், பாலாஜி இருவரும் வெளியேற, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி ஆகிய நால்வரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

யாஷிகா

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்பது ஏற்கெனவே ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்ததுதான். அந்த இருவர் யார் என பிக்பாஸ் ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருந்த சூழலில்தான், நேற்றைய எபிசோடில் (21.9.18) ஒரு டாஸ்கில் யாஷிகாவுக்கு ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது, அப்போதே ’பிக் பாஸ் யாஷிகாவை அனுப்ப முடிவெடுத்து விட்டார்’ என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

பிக் பாஸ் சீசன் இரண்டின் போட்டியாளர்களிலேயே குறைந்த வயதுடையவராக களம் இறங்கிய யாஷிகா ஆனந்த் ஷோவின் ஆரம்பத்தில் மார்டன் உடையில் வந்தாலும், போகப் போக சேலையில் அதுவும் பல சமயங்களில் மேக்-அப் இல்லாமலும் காட்சி தந்தது குறிப்பிடத்தக்கது.