வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (04/10/2018)

கடைசி தொடர்பு:19:25 (04/10/2018)

`பிக் பாஸ்’ பார்ட்டி - போட்டியாளர்களுக்குக் கமல் கொடுத்த கிஃப்ட்!

நூற்று ஐந்து நாள்கள் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் - 2 , ஒருவழியாக முடிவடைந்தது. டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்ட கடைசி நாள் இரவே போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்ட பார்ட்டி, 'பிக் பாஸ்' வீடு அமைந்திருக்கும் வளாகத்திலேயே நடந்து முடிந்தது. ஃபைனல் ஷூட் முடிந்தபின் ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சி, மறுநாள் அதிகாலை வரை நீண்டது என்கிறார்கள். ஓவியா உள்ளிட்ட பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சிலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

கமல்ஹாசன்

தொடர்ந்து, போட்டியாளர்களுக்கு கமல் தனியே அளித்த விருந்து, நேற்றைய தினம் சென்னையின் பிரபல ஓட்டலில் நடந்தது.  போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல் அழைப்பு விடுத்திருந்தபோதும், அனந்த் வைத்தியநாதன், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. 'தாடி' பாலாஜியின் மனைவி நித்யா பாலாஜி, கலந்துகொண்ட சிறிது நேரத்தில் வெளியேறிவிட்டார். பாலாஜியும் நித்யாவும் அங்கு பேசிக்கொள்ளவில்லை என்கிறார்கள். கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் பார்ட்டி நிறைவடைந்தபோது, ரூ.26,000 மதிப்புள்ள விவோ போனை பரிசாக வழங்கினார் கமல்.