வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (08/10/2018)

கடைசி தொடர்பு:21:58 (08/10/2018)

`வரிசையாகக் கொலை... 200 வயதிலும் இளமை!’ - `அதே கண்கள்' மோகினி தொடர்

இன்று முதல் தினமும் இரவு 10.30-க்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிற த்ரில்லர் தொடர் 'அதே கண்கள்.' ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பான `நசர்' இந்தித் தொடரை டப் செய்து தமிழில் ஒளிபரப்புகிறார்கள். 'வருகிறாள் மோகினி' என வெளியாகிய புரொமோ வீடியோவே திகில் கிளப்பியிருந்த நிலையில் இன்று முதல் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. என்ன கதையாம்? விசாரித்தோம்.

மோகினி

`200 வயது கடந்து வாழ்ந்து வருபவள் மோகினி. தீயசக்தி. மனிதர்களைக் கொல்வதன் மூலம் தன்னை இளமையாக வைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறாள் (லாஜிக்லாம் யோசிக்கக் கூடாது). இந்த மோகினிக்கு ரத்தோட் வம்சத்து மிருதுள் மீது காதல். `செத்தாண்டா மிருதுள்' என்கிறீர்களா? கரெக்ட். கவர்ந்து, கல்யாணம் முடித்து இரு குழந்தைகள் பிறந்தபின், கடைசியில் மிருதுளைக் கொன்றே விடுகிறாள் மோகினி. காரணம், அதே இளமை மோகம். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மோகினி-மிருதுள் தம்பதியின் மகன் அன்ஸ், அசாதாரண சக்தி கொண்டவனாக வருகிறான். அப்போதும் இளமையாகவே இருக்கிற மோகினி தன்னுடைய இளமைக்காக மகனைக் கொல்லப் போகிறாரா அல்லது அன்ஸ் மோகினியை அழிக்கப்போகிறாரா? இதெல்லாம்தான் மீதிக் கதை.

`அதே கண்கள்' பார்த்துட்டு தூங்கப்போனா கனவுல அந்த மோகினி வராம இருந்தால் சரி.