வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (10/10/2018)

கடைசி தொடர்பு:13:35 (10/10/2018)

96-ல் புரபோஸ் செஞ்சான்... இன்னும் மறக்கலை! - `நந்தினி' நித்யா ராம்

விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் `96' ரிலீஸானாலும் ஆச்சு, பலரையும் பாடாய்ப் படுத்தத் தொடங்கியிருக்கின்றன பழைய காதல்(கள்). நேற்றுவரைக்கும் சும்மா இருந்தவர்களெல்லாம் `கூட்டுங்கடா ரீ யூனியனை' எனக் கிளம்பியிருக்கிறார்கள். இதில் சாமானியர், பிரபலங்கள் என வித்தியாசமெல்லாம் இல்லை.

நித்யா ராம்

`நந்தினி' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதன் ஹீரோயின் நித்யா ராமைச் சந்தித்த போது, `96' பார்த்துட்டு வந்து 4 நாள் ஆச்சு. இன்னும் என்னோட ஸ்கூல் நாள்கள்ல இருந்து மீள முடியலை' என்றவர், சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

`ரேங்க் கார்டை அப்பா கிட்ட காட்ட பயந்து, அவரோட கையெழுத்தை தானே போட்டுக்கிட்ட பசங்க பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா ஹெச்.ஓ.டி கையெழுத்தைப் போட்டவ நான். போட்டு வசமா மாட்டி, ஸ்கூல், வீடு ரெண்டு இடத்துலயும் அடி பின்னியிருக்காங்க' என்றவர், அடுத்து அந்தக் காதல் மேட்டருக்கு வந்தார்.

`வருஷம் சரியா 96. பெங்களூருல படிச்சிட்டிருக்கேன். அவன் பேரு கிரண். எங்கிட்ட வந்து காதலைச் சொன்னான். எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.ரெண்டு நிமிஷம் பேசாம நின்னிட்டிருந்தவ திடீர்னு அந்த இடத்துல இருந்து ஓட்டம் பிடிச்சுட்டேன். மறுநாள் பார்த்தான். `இதை யார்கிட்டயும் குறிப்பா உங்க வீட்டுல சொல்லாத'ன்னான். அப்பவும் அவங்கிட்ட நின்னுகூட பேசாம ஓடிட்டேன். எங்க வீட்டுல இதுவரை சொல்லலை. ஆனா இந்தச் சம்பவமும் அவன் பேரும் என் மனசுல இருந்து மறையவே மாட்டேங்குது' என்றவரிடம், `ஏன்' என்றோம்.

`பிஞ்சு வயசுல எதுவும் அழுத்தமாப் பதியுமில்லையா' என்கிறார்.

நித்யா ராமிடம் காதலைச் சொன்னபோது கிரண் 4வது படித்தானாம். அப்ப நீங்க?

`ரெண்டாவது' என்கிறார்.