பெண்ணின்றி அமைவதில்லை ஆணின் உலகம். அந்தப் பெண் அவனை வார்த்தெடுத்தவளாகவோ, வாழ்க்கைத் துணையாக வந்தவளாகவோதான் இருக்க வேண்டும் என்றில்லை. வழிப்போக்கராகவோ, வழிகாட்டியாகவோகூட வந்து வாழ்தலை வரம் என்றுணர்த்திச் சென்றிருக்கலாம். ஊடகவியலாளர் நெல்சன் சேவியரின் வாழ்வையும் வண்ணமயமாக மாற்றியதில் மாண்புமிகு பெண் ஒருவரின் மகத்தான பங்களிப்பு இருக்கிறது. நெல்சனின் நேர்த்தியான வார்த்தைகளில் நெகிழ வைக்கிறது அந்த அன்பு.

அவளும் நானும்

‘`படித்துக்கொண்டே ஆல் இந்தியா ரேடியோவில் பார்ட் டைம் அறிவிப்பாளராக இருந்தேன். மத்திய அரசு ஊழியரான ஜெயஸ்ரீ ஸ்ரீகாந்த் அக்காவும் அங்கே பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை பர்சனல் கம்பானியன், மென்ட்டார் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இருவருக்குமே திருச்சி என்பது இன்னும் கொஞ்சம் அந்நியோன்யம் கூட்டியது.

சம்பாதித்துக்கொண்டே படிப்பையும் தொடர்வது எனக்குப் பெரிய சிக்கலாக இருந்தது. அந்த நிலையில் அக்காதான் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். என்மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டவர். பொருளாதார ரீதியாகவும் எனக்குப் பெரியளவில் உதவியாக இருந்தார்.

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று நின்றபோதும் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். ஊடகத் தொடர்புகளை அறிமுகப்படுத்தினார். விஜய் டி.வி-யில் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள்’ என்றொரு நிகழ்ச்சி வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நான் இணைத் தயாரிப்பாளராக இருந்தேன். என்னையே தொகுப்பாளராக இருக்கச் சொன்னார்கள். அப்போது என்னிடம் நல்ல உடைகள்கூட இல்லை. அக்காதான் அதற்கும் ஸ்பான்சர் செய்தார்.

எம்.எஸ்ஸி., மேத்ஸ் படித்த நான் லெக்சரர் மாதிரியான படிப்பு சார்ந்த வேலைக்குப் போவேன் என்றுதான் என்னைச் சார்ந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ‘மீடியா உனக்குப் பொருத்தமாக இருக்கும். நீ சரியான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்’ என்று முதலில் சொன்னவர் அக்காதான்.

பல நாள்கள் எனக்கு பஸ்ஸுக்கும் ஷேர் ஆட்டோவுக்கும்கூடக் கையில் காசிருக்காது. அக்காவுக்கு நேரம் இருந்தால் தன்னுடைய டூ வீலரிலேயே என்னைக் கொண்டு விடுவார். காசில்லை எனச் சாப்பிடாமல் வந்திருப்பேன். அது அக்காவுக்கு மிகச் சரியாகத் தெரியும். ‘வா... உன்கூடக் கொஞ்சம் பேசணும்’ எனக் கூட்டிச் சென்று சாப்பாடு வாங்கித் தருவார். அது பேசுவதற்கான சந்திப்பாக இல்லாமல், என்னைச் சாப்பிட வைப்பதற்கான சந்திப்பாகவே பல முறை இருந்திருக்கிறது.

எனக்கு அப்பா கிடையாது. அம்மாவும் தம்பியும் மட்டும்தான். என் அம்மாவுக்குப் பெண் குழந்தை இல்லாத குறை உண்டு. எனக்கும் அம்மாவைத் தவிர வேறு பெண்ணிடமும் பரிச்சயம் கிடையாது. அம்மாவின் ஏக்கத்தையும் அப்பா இல்லாத என் வாழ்வின் வெற்றிடத்தையும் தன் இருப்பால் நிறைத்தவர் ஜெயஸ்ரீ அக்கா.

எங்கள் இருவருக்கும் 12 வயதுதான் வித்தியாசம். எங்களுடைய இந்த நட்பை, உறவை இரு குடும்பத்தாரும் பார்த்த விதமும் எடுத்துக்கொண்ட விதமும் முக்கியம்.

கிருபா என் வகுப்புத்தோழி. அவரை எனக்குப் பிடித்திருந்தது. கிருபாவைக் காதலிக்கப்போகிறேன் என்கிற விஷயத்தைக்கூட அக்காவிடம்தான் முதலில் சொன்னேன். கிருபாவின் மீதான என் அன்பைச் சொன்னபோது, வேறு யாராவதாக இருந்திருந்தால் ‘இன்னும் வேலையில செட்டிலாகலை.... இப்போ எதுக்கு இதெல்லாம்’ எனக் கேட்டிருப்பார்கள். அக்காவோ, ‘இந்த வயசுல லவ் வரும். அதை மறுக்காதே... உன்னுடைய செலக்ஷன் சரியாதான் இருக்கும்...’ என்றார். கிருபாவை அக்காவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். கிருபா அப்போது என்னைவிட அதிகம் சம்பாதித்துக்கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து, என்னைப் பற்றிச் சொல்லி, ‘இவன் நல்லா வருவான்’ என நம்பிக்கை கொடுத்தார். அக்காவிடம் கடன் வாங்கித்தான் என் திருமணத்தை நடத்தினேன்.

நாம் நன்றாக வருவோம் என்பதில் நமக்கிருக்கும் நம்பிக்கையைவிட இன்னொருவருக்கு இருக்கும் நம்பிக்கை மிகப்பெரிய விஷயம். அது அக்காவிடம் இருந்தது. அறிமுகமில்லாத கட்டமைக்கப்படாத ஊடகம் போன்ற துறைகளில் ஒருவர் சாதிக்க, அவருக்கு ஒரு துணை அவசியம். அக்கா அப்படியொருவர். அவர் தன் வாழ்வில் தோற்றவரில்லை. `மென்ட்டார்' எனச் சொல்லப்படுகிற பலரும் தம் வாழ்வில் தோற்றவர்களாகவோ, தம் கனவுகளை இன்னொருவர் மேல் சுமத்துபவர்களாகவோ இருப்பார்கள். ஆனால். அக்கா தன் வாழ்வில் தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருப்பவர். குடும்பப் பொறுப்புகளை முழுமையாகச் செய்து முடித்தவர். அக்காவினுடையது கூட்டுக்குடும்பம். 19 வயதில் வேலைக்கு வந்தவர். தொடர்ந்து அரசுத் தேர்வுகள் எழுதி, தன் துறை சார்ந்த அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தவர். வேலையையும் பார்த்துக்கொண்டு, மகளுக்கும் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்கி, பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டு என 24 மணி நேரமும் தன்னை என்கேஜ்டாக வைத்திருப்பவர். தன்னை நம்பி இருப்பவர்களையும் அதே உற்சாகத்துடன் வைத்திருப்பவர்.அவரிடமிருந்து ஒருநாள்கூட நெகட்டிவ் வார்த்தையைக் கேட்டதில்லை. வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை நான் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு நான் ஓரளவு செட்டிலானதால் அக்காவின் உதவிகள் தேவைப்படவில்லை. அதுவரை என்னுடன் இருந்தவர், நான் வளர ஆரம்பித்த பிறகு என்னை அமைதியாகக் கவனிக்கத் தொடங்கினார். இப்போதும் வாய்ப்பு கிடைக்கும்போது சந்தித்துக்கொள்கிறோம். அக்கா மாறவே இல்லை.

இந்த உலகம் ஆணும் பெண்ணுமாக வாழப் படைக்கப்பட்டது. அதில் ஒருவரை மேலும், இன்னொருவரைக் கீழும் வைத்திருக்கும் வரையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. ஒரு பெண்ணை அடிமைப்படுத்திவிட்டு, ஓர் ஆண் அதிகபட்சமாக எதையும் சாதித்துவிட முடியாது.

ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு என்பது இயற்கையால் கொடுக்கப்பட்ட பாலியல் பேதமாக மட்டும் இருக்கட்டும்; மனரீதியாக இருக்கக் கூடாது. இந்த உலகில் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும். அந்த உண்மை தெரிந்துமே ஒரு தரப்பை நிராகரிப்பது தவறு.

ஜெயஸ்ரீ அக்காவின் உதவிகள் அப்படி ஆண், பெண் பேதம் பார்த்து எனக்குக் கிடைத்தவையல்ல. சக உயிரின் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அற்புத ஆன்மா, ஆளுமை அவர்.’’

நானும் அவளும்

``தயக்கத்தை உடையுங்கள்!’’

``சமையல் குறிப்புகள், கோலப் போட்டிகள் எனப் பெண்களுக்கான இதழ்கள் பெரும்பாலும் அவர்களின் உலகத்தைச் சுருக்குவதாகவே இருக்கும். இவற்றைத் தாண்டி பெண்களுக்கென ஓர் உலகம் இருப்பதை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு பெண்ணிடம் வெறும் பெண்ணியக் கருத்துகளை மட்டுமே கேட்க வேண்டியதில்லை. ஸ்போர்ட்ஸ், அறிவியல், அரசியல், தத்துவம் பற்றியும் பேசலாம்.

எந்தத் துறையிலும் உச்சம் தொடும் ஆண்களுக்கு எப்படியோ ஓர் அடையாளம் கிடைத்துவிடுகிறது. ஒரு பெண் ஒரு துறையில் சாதிக்கும்போது அவள் பெண்ணாக இருந்து சாதிப்பதாகப் பேசப்படுகிறது. அந்தச் சாதனையைவிடவும் அந்தப் பெண்ணை முன்நிறுத்துவதன் மூலம் அவளது சாதனை புறக்கணிக்கப்படுகிறது.

`சேர்மன்' என்கிற வார்த்தையை `சேர் பர்சன்' என மாற்றிவிட்டோம். ஏனெனில், அந்த இருக்கையில் ஆண், பெண் யாரும் உட்காரலாம். சொற்றொடர்களில் இப்படி மாற்றிவிட முடிகிறது. ஆனால், உண்மையான வளர்ச்சி என வரும்போது? இந்திரா நூயி தன் உழைப்பால் உயர்ந்தவர்; பெண் என்பதால் அல்ல. ஆனால், திரும்பத் திரும்ப `பெண் என்பதால் உயர்ந்துவிட்டார்' என்றும், `ஒரு பெண் மேலே வந்துவிட்டார்' என்றும்தான் சொல்லப்படுகிறது. அவர் ஓர் உயிர். உழைத்திருக்கிறார். அதற்கான அங்கீகாரம்தான் அவர் எட்டிய உயரம்.

நடிகர், நடிகை என்கிற சொற்றொடரே எனக்கு உறுத்தலாக இருப்பவை. நடிகன், நடிகை என்பதே சரி. நடிகர் என்பது பொது. ஆனால், நடிகர் என்கிற அடையாளத்தைப் பெண்ணுக்குக் கொடுப்பதில் நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை அவள் விகடன் போன்ற பெண்களுக்கான இதழ்கள்தான் உடைக்க வேண்டும். நடிகர் ஸ்ரீதேவி என்று போடுங்களேன்... ‘ர்’ விகுதி இருவருக்குமானதுதானே. பொதுச்சொல்லை பெண்ணுக்கு உரிமையாக்குவது இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இது போன்ற விஷயங்களை மீண்டும் மீண்டும் பெண்ணியக் கண்ணோட்டத்துடன் அணுகாமல் பொதுக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை அவள் விகடன் நிறைய செய்கிறது; தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே என் ஆவல்.’’