வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (07/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (07/11/2018)

`கல்யாணமாம் கல்யாணம்’ தொடரிலிருந்து வெளியேறியது ஏன்? - ஸ்ரீத்திகா விளக்கம்

'நாதஸ்வரம்', 'குலதெய்வம்' என தொடர்ந்து சன் டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரீத்திகா, கடந்த மே மாதம் 'கல்யாணமாம் கல்யாணம்' தொடர் மூலமாக முதன் முதலாக விஜய் டிவி பக்கம் வந்தார்.

ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கிறபோதே, ஹீரோவின் அம்மாவாக அந்தத் தொடரில் கமிட் ஆனது குறித்து, அப்போதே கேட்டோம்.

'அம்மா கேரக்டரான்னு கேக்காதீங்க... அந்த சீரியல்ல இனி ஹீரோயினே நான்தான்' எனப் பதிலளித்தார்.

ஶ்ரீத்திகா

ஆறு மாதங்கள்கூட கடக்காத நிலையில் தற்போது சீரியலில் இருந்து வெளியேறியிருக்கிறார். 'அவசரப்பட்டு அம்மா கேரக்டரை ஏற்று நடிக்க வந்தார். ஹீரோயினைவிட அந்தக் கேரக்டருக்குத் தொடரில் முக்கியத்துவம் இருக்குமென நம்பினார். ஆனால், சீரியலில் அவர் எதிர்பார்த்த சூழல் அமையாததாலேயே வெளியேறிவிட்டார்' எனப் பேச்சுகள் கிளம்ப, ஸ்ரீத்திகாவிடம் பேசினோம்.

``அம்மா கேரக்டர்ன்னு தெரிஞ்சேதான் நடிக்க கமிட் ஆனேன். அதனால அந்தக் கேரக்டர் செட் ஆகாமலோ, பிடிக்காமலோ நான் வெளியேறலை. `கல்யாணப் பரிசு'ங்கிற தொடர்ல ஹீரோயினா நடிக்க வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் தேதிகள்ல பிரச்னை வராதுனு நினைச்சு அந்த சீரியலுக்குக் கமிட் ஆனேன். ஆனா துரதிர்ஷ்டம், என்னால ரெண்டு தொடரையும் பேலன்ஸ் பண்ணி நடிக்க முடியலை. 'கல்யாணமாம் கல்யாணம்' தொடர்ல இருந்து நான் வெளியேறியதற்கு இது மட்டுமே காரணம்' என்கிறார் ஸ்ரீத்திகா.