வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (15/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (15/11/2018)

'ஜோடி' ஷோவிலிருந்து கடைசி நேரத்தில் காயத்ரி விலகியது ஏன்?

விஜய் டி.வி-யில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வாரம் ஒளிபரப்பாகத் தொடங்கியது, 'ஜோடி' ஷோ. பங்கேற்கும் ஜோடிகளில் ஒரு ஜோடியாக, 'சரவணன் மீனாட்சி'யில் கணவன் மனைவியாக நடித்த சங்கரபாண்டியன் - காயத்ரி யுவராஜ் ஆடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் ஆடிய ப்ரொமோ வீடியோவும் வெளியானது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான முதல் எபிசோடில் காயத்ரிக்குப் பதிலாக கிருத்திகா சங்கரபாண்டியனுடன் இணைந்து ஆடினார்.

'காயத்ரிக்கு என்ன ஆனது' என விசாரித்தோம்.

காயத்ரி

'முதல் எபிசோடுக்கான ரிகர்சலில் கலந்துகிட்டு தீவிரமாகப் பயிற்சி எடுத்திட்டிருந்தாங்க. ஷூட்டுக்கு முந்தைய நாள் ராத்திரி, ரிகர்சல் முடிச்சு வீட்டுக்கு டூ வீலரில் கிளம்பினாங்க. வழியில சின்ன ஆக்ஸிடென்ட். வழுக்கி ரோட்டுல விழுந்ததுல பலத்த அடி. கை எலும்பு உடைஞ்சுடுச்சு. இந்தச் சூழல்ல டான்ஸ் பண்ணக் கூடாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அதனாலேயே, அவங்களால கலந்துக்க முடியாம கடைசி நேரத்துல கிருத்திகா ஷோவுக்குள் வந்தாங்க' என்கின்றனர் சக போட்டியாளர்கள்.

விரைவில் குணமடையட்டும்.