வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:15 (05/12/2018)

`இந்த வாரம் என்கேஜ்மென்ட்... ஆல்யாவுடனான பிரேக்-அப் பத்தி இனி வேண்டாமே!' - மானஸ்

ஆல்யா மானசாவுடனான பிரேக்-அப்'பில் இருந்து மீண்ட மானஸுக்கு தோழி சுபிக்‌ஷாவுடன் இந்த வாரம் நிச்சயதார்த்தம்

 "டிசம்பர் 14 நிச்சயதார்த்தம். புது வருஷத்துல கல்யாணம். கூடவே, ஜெய்யுடன் செகண்ட் ஹீரோவாக நடித்திருக்கும் படம், ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இன்னொரு பெயரிடப்படாத படத்திலும் லீட் ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறேன். 'சுபிக்‌ஷாவை சந்தித்த நாள்ல இருந்தே என்னோட வாழ்க்கையிலும் சுபிட்சம்தான்'... உற்சாகத்துடன் பேசுகிறார், 'மானாட மயிலாட' மானஸ். ' மானாட மயிலாட' ஷோவின் முதல் சீசனில், ஆல்யா மானசாவுடன் ஆடியவர். ஆல்யாவுடனான பிரேக்-அப்'க்கு பிறகு, 'சட்'டென சுதாரித்தவருக்குத்தான் இந்த வாரம் என்கேஜ்மென்ட்.

மானஸிடம் பேசினோம்.

மானஸ்

''கடந்துபோன விஷயங்களை நான் எப்பவுமே பேச விரும்பறதில்லை. வருத்தப்படற மாதிரி ஏதாவது நடந்திருந்தா, 'நடந்ததெல்லாம் நல்லதுக்கே'ன்னு நினைக்கிற டைப் நான். ஆல்யாவுடனான பிரேக்-அப் பத்தியே திரும்பத் திரும்ப என்கிட்ட கேக்காதீங்க. நான் அடுத்த லெவலுக்குப் போயிட்டேன் ப்ரோ.

சுபிக்‌ஷா என் வாழ்க்கையில சரியான தருணத்துல எனக்குக் கிடைச்சவங்க. கடவுள், சமயங்கள்ல தடுக்கிவிழப்போற நொடியில ஒருத்தங்களை அனுப்பி, தாங்கிப்பிடிக்கவைக்கிற ஆச்சர்யத்தை நிகழ்த்துவார். என் வாழ்க்கையில சுபிக்‌ஷா அப்படித்தான் கிடைச்சாங்க' எனப் பூரிக்கிறார்.

சுபிக்‌ஷாவிடம் பேசியபோது, 'மானஸும் எனக்கு வரமா கிடைத்தவரே. எங்க இரு வீட்டார் தரப்பும் சம்மதிச்சு ஆசீர்வதிச்சே நாங்க வாழ்க்கையில இணையப்போறோம். கல்யாணம் ஆறு மாசத்துக்குள்ள இருக்கும். இன்னும் தேதி முடிவாகலை'' என்றார்.