வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (07/12/2018)

கடைசி தொடர்பு:15:45 (07/12/2018)

விகடன் பிரைம் டைமில் உங்கள் அபிமான `தென்றல்’

விகடன் டிவி யூடியூப் சேனலில் `தென்றல்’ தொடர் மறு ஒளிபரப்பாவது குறித்து

விகடனின் 20 ஆண்டு சின்னத்திரைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட விகடன் பிரைம் டைமுக்கு (விகடன் டிவி யூடியூப் சேனலில் திங்கள் டு சனி இரவு 7 முதல் 11 மணி வரை) சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு. `திருமதி செல்வம்' மற்றும் 'கோலங்கள்' தொடர்களை மறுபடியும் பார்த்து மகிழ்கிற மக்கள், இந்தத் தொடர்கள் தங்களது அந்தக் கால (சீரியல் ஒளிபரப்பான நாள்கள்) நினைவுகளைக் கிளறிவிடுவதாக நெகிழ்கிறார்கள்.

தென்றல்

`திருமதி செல்வம்’, `கோலங்க'ளைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதியிலிருந்து இரவு 9.30-க்கு ஒளிபரப்பாகிறது `தென்றல்.’

தீபக், ஸ்ருதி உள்ளிட்டோர் நடித்த 'தென்றல்' ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம். 'தென்றல் நாள்கள் ஒரு கல்லூரியின் நாள்கள்போல் கடந்துசென்றன' என அதன் நிறைவு நாளின்போது குறிப்பிட்டிருந்தனர், அதில் நடித்த நட்சத்திரங்கள்.

மீண்டும் தென்றலை ரசிக்க இருக்கும் சீரியல் ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியாகத் தொடரில் நடித்த நடிகர், நடிகைகளின் பேட்டிகளும் அதே விகடன் பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளன.

சீரியல் பிரியர்களே, மிஸ் பண்ண மாட்டீங்கதானே?