Published:Updated:

நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா

நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா

இது ஆஹா திருமணம்!

நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா

இது ஆஹா திருமணம்!

Published:Updated:
நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா

து முதலிரவு அறை. மல்லிகையின் வாசம் சூழ வெட்கப் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறாள் நாயகி. முன் நெற்றியில் அசைந்தாடும் கற்றைக் கூந்தலைக் காதோரம் நகர்த்தி, சரிசெய்து கொண்டிருப்பதால் வளையோசை மட்டுமே சன்னமாக ஒலிக்கிறது. தொடர்ந்து நிசப்தம்… நிசப்தம்… நிசப்தம்!

நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா

`தன் கணவன் முதன்முதலாக தன்னிடம் என்ன சொல்லப் போகிறான்? நம்மை எப்படி அழைக்கப் போகிறான்?’ என்றெல்லாம் கண்களில் ஜீவன் சேர்த்து அவனை ஏறிட்டுப் பார்க்கிறாள். பார்த்த விழி பார்த்தவாறு இருக்க... நாயகன் என்ன பேசியிருப்பான்?

`எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைங்க… கட்டாயப்படுத்திதான் சம்மதிக்க வெச்சாங்க. இந்த டைவர்ஸ் பேப்பர்ல கொஞ்சம் கையெழுத்து போடுறீங்களா?’ - இடியையும் மின்னலையும் இதயத்தில் இறக்கி வைத்தாற்போல பேசினால் எப்படி இருக்கும் அவளுக்கு?

உதிரும் கண்ணீருக்கு அணை போட முடியாத வலி. புகுந்த வீட்டுக்குள்  நுழைந்தவுடன் கிடைத்த முதல் பேரதிர்ச்சி. இனி, இந்த வாழ்வு நிலைக்குமா என்கிற விடை தெரியாத குழப்பம். இனி அவனைத் தன் கணவனாக நினைத்து ஒரு மனைவி என்கிற வகையில் அவன் மனதை மாற்றப் போகிறாளா? இல்லை... நண்பனாக மாறிவிட்ட கணவனுக்கு இனி தோள் கொடுக்கும் தோழியாகி அவன் கனவுகளை நிறைவேற்றும் பாலமாகப் போகிறாளா? பல கேள்விகளுக்கான விடையாக வருகிறது ‘திருமணம்’ தொடர்!

அக்டோபர் 8 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு `கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் மங்கலமாக ஆரம்பமாகிறது  `திருமணம்’ மெகா தொடர். ’மாஸ்டர் சேனல்’ நிறுவனத்தின் இ.மாலா இத்தொடரைத் தயாரிக்கிறார். பிதாமகன், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பாலசுப்ர மணியெம் ஒளிப்பதிவு மேற்பார்வையில் இணைகிறார். `யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட முன்னணி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் `இயக்க மேற்பார்வை’ செய்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் நிஜத்துல அறுந்த வாலு! - ‘திருமணம்’ நாயகி ஸ்ரேயா



தொடரின் நாயகி ஜனனியாக ஸ்ரேயாவும் நாயகன் சந்தோஷாக சித்துவும் அறிமுகமாகிறார்கள். விளம்பரப்பட நட்சத்திரமான  ஸ்ரேயா, மங்களூரைச் சேர்ந்தவர். டப்ஸ்மாஷிலும்  வெள்ளித்திரையிலும் கலக்கியவர் சித்து.

``ஹாய்... என் பேரு ஜனனி. நான் ரொம்பச் சமத்து. எனக்கு ஒரு ஸ்வீட் தங்கச்சி இருக்கா. அவளும் நானும் ரொம்ப ஜாலியா விளையாடிட்டு இருப்போம். எனக்கு ஏதாச்சும்னா எங்க அண்ணன் துடிச்சுப் போயிடுவார். எனக்கு இப்ப கல்யாணம் நடக்கப்போகுது. வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க'' என கேரக்டராகவே மாறிய ஸ்ரேயாவிடம், ``இது ஷூட்டிங் ஸ்பாட்தான் மிஸ், ஆனா, இப்ப நீங்க ஜனனி இல்ல... ஸ்ரேயா'' என்றதும், ஒரு நிமிடம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவராக, `‘எனக்கு ரியல் ஸ்ரேயாவா இருக்குறதைவிட ஜனனி கேரக்டர்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு. சீரியல்லதான் நான் சமத்து. மத்தபடி நான் நிஜத்துல அறுந்த வாலு. பிறந்ததும்    படிச்சதும் மங்களூர்னாலும் தமிழ்ப்பொண்ணுன்னு சொல்லிக்க ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுலயும் தலை நிறைய மல்லிகைப்பூ வெச்சிக்கிட்டு, ‘வணக்கம்’ சொல்லிட்டு, பட்டுப்புடவை கட்டி மணமேடையில் உட்காரும் அழகு இருக்கே… ஐ ரியலி லவ் திஸ்!

அப்புறம்... இது ஷூட்டிங் ஸ்பாட் போலவே இல்ல. எல்லாரும் ஒரே ஃபேமிலி போல தான் இருக்கோம். ஷாட் முடிஞ்சதும் கிடைக்குற ப்ரேக்ல எல்லாரும் மியூசிக்கலி பண்ணுவோம். டான்ஸ், பாட்டு, காமெடின்னு ஒரே அரட்டையா இருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்துல சேட்டை ஆரம்பிக்கும் பாருங்க’’ என்று ஸ்ரேயா சொல்லும்போதே `மியூசிக்கலி ஆப்'போடு நமக்கு முன்னால் வந்து நிற்கிறார் ஹீரோ சித்து.

‘`நானும் பேஸிக்கலி வாலு பையன் தாங்க. சீரியல்னா பொண்ணுங்கதான் ஸ்பெஷல்னு சொல்வாங்க. இந்த சீரியலைப் பொறுத்தவரைக்கும் எனக்கும் சரிசமமான ரோல் இருக்கு. அப்புறம் நான் வந்து…’’ என க்ளோஸ் அப்பில் முகத்தைக் காட்டியவரைப் பார்த்து, ‘நிறுத்துங்க... நிறுத்துங்க... உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்றால், ஸ்ரேயாவைவிட கொஞ்சம் கூடுதலாக வெட்கம் காட்டி பேசுகிறார் சித்து.

``அதுவந்து… அதுவந்து… உண்மையை சொல்லணும்னா, எனக்கு சோஷியல் மீடியாவில் கேர்ள் ஃபாலோயர்ஸ் அதிகம்ங்க. `அகோரி’ன்னு ஒரு படத்துல ஹீரோவா நடிச்சிருக்கேன். அப்புறம் குட்டி குட்டியா நிறைய வீடியோஸ் பண்ணியிருக்கேன். அதுக்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ்…'' எனப் பற்பசை விளம்பரம் போல பல்லைக் காட்டி அசடு வழிந்த சித்துவைப் பார்த்து, ``ரொம்ப வழியுதுப்பா... துடைச்சிக்கோ'' எனக் கண்ணடித்தார் ஸ்ரேயா. அவரை வம்புக்கு இழுக்கும் விதமாகவே, `‘இவங்க ரொம்ப நல்லா பாடுவாங்க… கொஞ்சம் கேளுங்க சார்’’ என்றதும், நாமும், `நம்பலாமா, வேண்டாமா' என்கிற தயக்கத்துடனே அசட்டுப் புன்னகையுடன் பாடச் சொல்லிக் கேட்டோம்.

‘நீல மலைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது...’


ஸ்ரேயா பாட, சித்து அபிநயம் பிடிக்க, `ஷாட் ரெடி' என்றதும் பறந்தார்கள் இருவரும்!

அய்யனார்ராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism