வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (21/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (21/12/2018)

மாலையில் நிச்சயதார்த்தம்... நள்ளிரவில் பர்த் டே! - களைகட்டிய மானஸ் - சுபிக்‌ஷா டான்ஸ்

'ராஜா ராணி' ஆல்யா மானசாவுடனான 'பிரேக்-அப்'பில் இருந்து மீண்ட மானஸுக்கு தோழி சுபிக்‌ஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிம்பிளாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இவர்கள் இருவருடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.

மானஸ்- சுபிக்‌ஷா

மானஸிடம் பேசினோம்.

``கல்யாண தேதி இன்னும் முடிவு செய்யலை. 2019 ஜூன் ஜூலைக்குள் இருக்கலாம். வர்ற வருஷத்துல என்னோட ரெண்டு படமும் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. எல்லாம் சுபிக்‌ஷா வந்த நேரம்' எனப் பூரிக்கிறார்.

மாலை தொடங்கிய நிச்சயதார்த்தத்தில் நண்பர்களின் நடனம் ஹைலைட்டாக இருந்ததாம்.

மானஸ்

'நண்பர்கள் மட்டுமல்ல, நாங்க ரெண்டு பேருமே டான்ஸ் பண்ணினோம். 'மானஸ் கூட ஆடணும்னா ஆரம்பத்துல எனக்குப் பயமா இருக்கும். ஆனா, அவரே என்கரேஜ் பண்ணி பண்ணி இப்ப 'பார்க்கலாம்'னு தயாராகிடுறேன். என்கேஜ்மென்ட் அன்றைக்கும் எங்க டான்ஸ் பட்டையக் கிளப்புச்சுன்னே சொல்லலாம். 11 மணிக்கு என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் அடுத்த அரை மணி நேரத்துல அடுத்த நிகழ்ச்சிக்கு ரெடியாகிட்டோம். மானஸோட பர்த் டேதான் அந்த நிகழ்ச்சி. ஆமாங்க, ஒரே மேடையில ரெண்டு நிகழ்ச்சி. என்கேஜ்மென்ட்டுக்கு மோதிரம் போட்டு விட்டதோடு புது ஐபோன் ஒண்ணும் பரிசாத் தந்து அசத்திட்டார்' என்கிறார் சுபிக்‌ஷா.

செலிபிரிட்டிகள் யாரும் என்கேஜ்மென்டுக்கு அழைக்கப்படவில்லை. திருமணத்துக்குத் தனக்கு அறிமுகம் தந்த 'மானாட மயிலாட' டீம் உட்பட, அத்தனை டிவி பிரபலங்களையும் அழைக்க இருக்கிறார்களாம்.