சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் ராதாரவி! | radharavi is president candidate in tv actors union election

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/12/2018)

கடைசி தொடர்பு:20:55 (22/12/2018)

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் ராதாரவி!

கடந்த சில மாதங்களுக்கு முன், டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட்டு, தலைவரான நடிகர் ராதாரவி, அடுத்த மாதம் நடைபெற உள்ள சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்.

ராதா ரவி

டி.வி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் 1200 பேர் உறுப்பினர்களாக உள்ள்னர். இங்கு உறுப்பினர்களாகப் பதிவு செய்தால் மட்டுமே சீரியல்களில் நடிக்க முடியும் அல்லது சீரியல் வாய்ப்புகள் கிடைத்த பின் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள வேண்டும். சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது.

நடிகர் போஸ் வெங்கட் செயலாளராக உள்ள தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து டிசம்பர் 25-ம் தேதி, இப்போதைய நிர்வாகத்தின் கடைசிப் பொதுக்குழு கூட இருக்கிறது. அதில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை அறிவிக்க உள்ளார்கள். 2019 ஜனவரி 26-ம் தேதி அந்தத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் மொத்தம் நான்கு அணிகள் போட்டியிடலாமென தெரிகிறது. இதில் ஒரு அணியில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார்.