டிராய் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பிறப்பித்துள்ள புதிய ஆணையால் டிசம்பர் 29-ம் தேதி முதல் கேபிள் மற்றும் டிஷ் சேவைகளின் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப் படவுள்ளன. இந்தத் துறையில் கூடுதல் வெளிப்படைத் தன்மை வேண்டியும், அனைத்து அரசு மற்றும் தனியார் ஒளிபரப்பு சேவைகளையும் ஒழுங்குப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 130 ரூபாய் கட்டணமாகச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தூர்தர்ஷன் உட்பட 100 சேனல்கள் வழங்கப்படும். இதற்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து, ரூ.153.40 கட்டணம் வரும். கூடுதலாக, கட்டணமில்லாத சேவைகளாகக் கருதப்படும் 25 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.23.60 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும், கட்டண சேனல்களுக்கும் அதற்குரிய கட்டணத்தைக் கட்ட வேண்டும்.

ஆனால், இந்த கட்டண மாற்றங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் கேபிள் டி.வி ஆபரேட்டர்களோ, ‘ஒரு சேனலுக்கான கட்டணம் ரூ. 1 முதல் ரூ.19 வரை இருக்கலாம். இதனால், கேபிள் கட்டணங்கள் உயரும். எனவே, ஜி.எஸ்.டி வரியையாவது குறைக்க வேண்டும். இந்த முறையை அமல்படுத்துவற்கு, அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கான சேனல்களைத் தேர்வுசெய்யத் தனியாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டிவரும். வாடிக்கையாளர் தொடர்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே, இதை நடைமுறைப்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்’ என்கின்றனர்.

கேபிள் டி.வி சேவையைப் பயன்படுத்தும் மக்களைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. கட்டணம் ஏறுவது உண்மைதான். ஆனால், தற்போது வரும் 300 சேனல்களிலேயே பாதி சேனல்ளுக்கும் மேலான சேனல்களை நாம் பார்ப்பதில்லை. வேண்டிய சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்தால், முன்பிருந்த கேபிள் தொகையிலேயே மாதச் சந்தாவை முடித்துக்கொள்ளலாம். இருப்பினும், தனியார் சேனல்களின் கட்டணம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அவற்றில் எது வேண்டும், எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பது முக்கியம். விளையாட்டு சேனல்களை, தேவைப்படும் மாதத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.

இருப்பினும், விலைகளை மேலும் குறைக்கலாம் என்பதுதான் கேபிள் ஆபரேட்டர்களின் வேண்டுகோள். ஆனால், ‘எப்படியும் கட்டணம் அதிகமாக இருந்தால், பார்வையாளர்கள் குறைந்துவிடுவர். விளம்பரங்களில் வரும் வருமானம் குறைந்துவிடும். எனவே, எப்படியும் விலை குறைந்துவிடும்’ என்கிறது ஒரு தரப்பு.

இது வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதான் என்கின்றனர். தனியார் டி.டி.ஹெச் சேவைகளின் கட்டணமும் இதனால் குறையும். மேலும், மொத்தமாக ஒரு நிறுவனத்தின் சில சேனல்கள் சேர்த்து ‘காம்போ பேக்’களும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ம.காசி விஸ்வநாதன்