`நிரோஷா அணிக்கு ஆதரவா?’ - சின்னத்திரை தேர்தல் குறித்து நளினி விளக்கம்! | nalini talks about tamil television union election

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:13:15 (26/01/2019)

`நிரோஷா அணிக்கு ஆதரவா?’ - சின்னத்திரை தேர்தல் குறித்து நளினி விளக்கம்!

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. சிவன் சீனிவாசன், நிரோஷா, போஸ் வெங்கட், ரவி வர்மா ஆகிய நான்கு பேர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். `சரத்குமார் - விஷால் மோதிய நடிகர் சங்கத் தேர்தல் தோற்றது’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு, நான்கு அணிகள், அவர்களுக்கிடையே மோதல்கள், அடிதடி எனப் பரபரப்பு நிலவிய சூழலில், சங்கத்தின் முன்னாள் தலைவர் நளினியிடம் பேசினோம்.

நளினி

``நான் போட்டியிட்டப்ப ரெண்டே அணிகள்தான். எதிரணியுடன் எந்தப் பிரச்னையும் இல்லாமத் தேர்தல் நடந்தது. நான் ஜெயிச்ச பிறகு, எதிர்த்துப் போட்டியிட்டவங்க எங்கிட்ட ஆரோக்கியமான அணுகுமுறையைக் கடைப்பிடிச்சாங்க. இன்னைக்கு என்னடான்னா, நான்கு அணிகள். இப்படிப் பிரிஞ்சு நின்னு போட்டியிடறது ஆரோக்கியமானதில்லை. சுமார் 1,500 பேர் இருக்கோம். ஒருமித்த கருத்தோட நமக்கான பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியாதா என்ன? நேற்றைக்கு முன் தினம் அணிகளுக்கிடையே அடிதடி கலாட்டால்லாம் நடந்ததா என் காதுக்குத் தகவல் வந்தது. எதுக்கு இந்த அடிதடி, எதுக்கு இத்தனை அணி?

நானேகூட ஒரு மெசேஜ் கொடுத்தேன், `நாலு அணியும் உட்கார்ந்து பேசி சுமுகமா போங்க’ன்னு. ஆனா யாரும் கேட்ட மாதிரித் தெரியலை. தேவையில்லாம சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணிட்டிருக்காங்க. அதனால, இந்தத் தேர்தல்ல இன்வால்வ் ஆக எனக்கு விருப்பமே இல்லை’’ என்றார். நளினி ஆதரவு தங்களுக்கே என இவரது போட்டோவையெல்லாம் போட்டு நிரோஷா தலைமையிலான அணி ஓட்டு கேட்டு வந்த நிலையில் நளினி இவ்வாறு கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க