Published:Updated:

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”
பிரீமியம் ஸ்டோரி
“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

Published:Updated:
“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”
பிரீமியம் ஸ்டோரி
“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

மீண்டும் அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார் கோவை சரளா. ‘மக்கள் நீதி மய்யம்’ சார்பாக,  கட்சிப்பணிகளில் பிஸியாக இருந்தவரை சந்தித்தோம்... 

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“35 வருடத்துக்கு முன்னாடி ஆழ்வார்பேட்டைக்குக் குடிவந்து, சினிமா பயணத்தைத் தொடங்கினீங்க. இங்கிருந்தே உங்க அரசியல் பயணமும் ஆரம்பமாகியிருக்கு. எப்படி இருக்கு இந்த அனுபவம்?!”

“ ‘முந்தானை முடிச்சு’ ரிலீஸுக்குப் பிறகு சென்னைக்கு வந்தேன். ஆழ்வார்பேட்டை ராமலிங்கேஸ்வரர் தெருவுல இருந்தேன். கமல் சார் ஆபிஸ் இந்த ஏரியானு அப்போதான் சொன்னாங்க. அடிக்கடி அந்தத் தெருவைக் குறுக்கும் நெடுக்குமா அளந்துட்டு வருவேன்.  பிறகு, எஸ்.பி.முத்துராமன் சார் டைரக்‌ஷன்ல, கமல் சார் படத்துல வேலைக்காரியா ஒரு சின்ன கேரக்டர்ல நடிக்க சான்ஸ் கிடைச்சுது. அப்போ,  நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. அவர் பெரிய ஹீரோ. ஆனா, எந்த பந்தாவும் இல்லாம ஜாலியாப் பழகுவார். முதல்நாள் அவர்கூட நடிச்ச பிறகு, அன்னைக்குத் தூக்கம்கூட வரலை... அவ்ளோ சந்தோஷம். பிறகு, ‘காதல் பரிசு’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’ தொடங்கிப் பல படங்கள்ல நடிச்சுட்டேன். எங்க நட்பும்  நல்லா டெவலப் ஆகிடுச்சு.

‘சதிலீலாவதி’ படத்துல என்னை ஹீரோயினா நடிக்கச் சொல்லி கமல் சார் மேனேஜரா இருந்த டி.என்.எஸ் எனக்கு போன் பண்ணப்போ, நான் நம்பலை. நான் அப்போ ஒரு தெலுங்குப் படத்துல பிஸியா இருந்தேன். திடீர்னு கமல் சாரே போன் பண்ணி, ‘உங்க பதிலுக்குத்தான் வெயிட் பண்றேன், நம்ப மாட்டேங்கிறீங்கபோல!’னு கேட்டார். மறுபடியும் சந்தோஷத்துல தூக்கம் போச்சு. ரெண்டு மாசம் காத்திருந்து வாய்ப்புக் கொடுத்தார், கமல் சார். இந்தப் படத்துக்காக அவர் என்கிட்ட கோவை பாஷையைக் கத்துக்கிட்டது, எனக்கு ஆச்சர்யமா இருந்தது. காமெடி நடிகையா இருந்த என்னை ஹீரோயினா புரொமோட் பண்ணின படம்.  ‘ஓடலைனா, மொத்த இண்டஸ்ட்ரியே கமல் சாரை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்களே, நம்மை நம்பி வாய்ப்புக் கொடுத்திருக்காரே’னு இந்தப் படம் ஓடிடணும்னு டெய்லி ப்ரே பண்ணினேன். படம் சூப்பர் டூப்பர் ஹிட்! என் மேலே நம்பிக்கைவெச்ச ஒரு நல்ல மனிதர், மகத்தான கலைஞர்... இன்னைக்கு மிகச்சிறந்த அரசியல் தலைவரா மாறியிருக்கார். அவர்கூட நடிக்கிற காலத்திலும் சரி, இப்போவும் சரி... அவர்கூட இருக்கிறது எனக்கு சந்தோஷம். மனநிறைவுனுகூட சொல்லலாம்.”

“பாக்யராஜுக்கு அம்மாவா நடிச்சப்போ, உங்க வயசு ரொம்பக் கம்மி. பிறகு, அப்படி இப்படினு மாறி மாறி நடிச்சு, மாடர்ன் டிரெஸ்லயும் தலைகாட்டுனீங்க...”

“என் முதல் படத்திலேயே கர்ப்பிணியா நடிச்சேன். அப்போ நான் ஸ்கூல் பொண்ணு. ‘முந்தானை முடிச்சு’ படத்துல 65 வயசு பாட்டியா நடிக்கக் கேட்டப்போ, ‘இந்தப் படம் எனக்கு ஓகே ஆகக் கூடாது. ஆச்சுனா, இப்படியேதான் வாய்ப்பு வரும்’னு வேண்டிக்கிட்டேன். பாக்யராஜ் சார்தான், ‘இந்தப் படம் உனக்கு வேற மாதிரி இருக்கும்’னு சொன்னார். படமும் என் கேரக்டரும் நல்லா வந்திருந்துச்சு. அதைவிடக் காமெடி என்னன்னா, வாணிஸ்ரீ அம்மாவுக்கு நான் பாட்டியா நடிச்சிருக்கேன். இப்படியே போச்சு பல படங்கள். கட் பண்ணா... கொஞ்சம் கொஞ்சமா உடை, தோற்றத்துல மாற்றம் கிடைச்சு, ‘காஞ்சனா’ படத்துல ‘ஸ்விம் ஸ்லிப்’ல நடிக்கிற அளவுக்கு வந்து நின்னுச்சு. எல்லாருக்கும் முன்னாடியே கிடைக்கிற வாய்ப்பு, எனக்குக் கடைசியா கிடைக்குதுனு நினைச்சுக்கிட்டேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“கவுண்டமணி, செந்தில் - சரளா, வடிவேலு - சரளா, விவேக் - சரளா... இதுல எந்த காம்போ உங்களுக்கு ஸ்பெஷல், எதை மறுபடியும் எதிர்பார்க்கலாம்?”

“நடிகர்களுக்குத் தகுந்த மாதிரி, அவங்ககூட மெர்ஜ் ஆகி, அவங்க ஸ்டைலுக்குப் போறதுதான் என் ஸ்டைல். கவுண்டமணி - செந்தில்கூட நடிச்சப்போ, நான் வளர்ந்து வர்ற நடிகை. வடிவேலுகூட நடிக்கிறப்போ, `பெண்களுக்கு சினிமாவுல சான்ஸே இல்லையே’னு கோபமா சுத்திக்கிட்டு இருந்த நேரம். கிடைச்ச வாய்ப்பைவிடக் கூடாதுனு இருந்தேன். ‘காலம் மாறிப்போச்சு’ படத்துலதான் நானும் அவரும் ஜோடியா நடிச்சோம். இறங்கி அடிப்போம்னு அடிச்சதுதான், அந்தப் படம்.  மத்தபடி, இதுல எல்லாருமே எனக்கு ஸ்பெஷல்தான். எந்த காம்போ உங்களுக்கு வேணுமோ, அது திரும்ப வரட்டும்னு வேண்டிக்கோங்க.”

“மனோரமாவுக்குப் பிறகு நீங்க. உங்களுக்குப் பிறகு எல்லாரையும் ஈர்க்கிற காமெடி நடிகை தமிழ் சினிமாவில் இல்லையே?”


“நானென்ன சினிமாவைவிட்டே போயிட்டேன்னா சொன்னேன். ஆல்ரெடி சொன்னேனே, பெண்களுக்கு சினிமாவுல முக்கியத்துவம் இல்லை. பெண்களுக்கு இங்கே நல்ல சம்பளம், நிலையான சம்பளம் இல்லை. அதை நான்தான் கொஞ்சம் பிரேக் பண்ணேன்னு நினைக்கிறேன். ஓடியாடிப் படம் பண்ணலை. எனக்கு வந்ததை நல்லபடியா செஞ்சு கொடுத்தேன். இப்போவும் என் இடத்தைக் காலியா விட்டுடலை, அப்படி விடவும் மாட்டேன். மத்தபடி, இங்கே பெண்களுக்கு முக்கியமான கேரக்டர்கள் கிடைக்கிறதில்லை. தப்பித் தவறிதான் யாரோ பொழைச்சு வர்றாங்க. இப்போ ஒரு நயன்தாரா டாப் நடிகையா வந்திருக்காங்க. ஆண்கள் அப்படியா, கையைத் தூக்குனாலே படம் ஓடும். காமெடி நடிகைகளும் பலர் வந்தாங்க. சரியான வாய்ப்புக் கிடைக்கலை. இதுல யாரைக் குற்றம் சொல்றதுனு புரியலை.”

“வேலையே இல்லாத ஒரு நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?”

“ரொம்ப சூப்பரா இருக்கும். எனக்குத் தேவையானதை நான்தான் பண்ணிக்குவேன். யாரையும் சார்ந்திருக்கிறது எனக்குப் பிடிக்காது. ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் எல்லாத்துக்கும் அதானே காரணம். சில நேரம் நைட்டு 2:30 மணிக்கு எந்திரிச்சிடுவேன். சில நேரம் 4:30, 8:00, 12:00... இப்படி மாறும். அப்புறமென்ன, டீ குடிப்பேன், எக்சர்சைஸ் பண்ணுவேன், மெடிடேஷன் பண்ணுவேன். எனக்கு நானேதான் சமைச்சுக்கணும். மத்தவங்க சமைச்சா பிடிக்காது. பிறகு, வீடியோ கேம்ஸ் விளையாடியே ஆகணும். இன்வென்ஷன் கேம்ஸ், ஹிட்டன் கேம்ஸ்... இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். அப்புறம் சாமி சீரியல்ஸ் நிறைய பார்ப்பேன். பேப்பர் படிக்க மாட்டேன், டி.வி பார்க்கமாட்டேன். ஆனா, நாட்டு நடப்புகளெல்லாம் எப்படி வரும்னு தெரியாது, காதுக்கு வந்திடும்.”

“அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?” 

“தினம் தினம் தண்ணிப் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, அந்தப் பிரச்னை, இந்தப் பிரச்னை... தமிழ்நாடு டெய்லி ஓலம் போட்டுக்கிட்டுதான் இருக்கே தவிர, இருந்த அரசியல்வாதிகள் எதையும் மாத்தலை. நாம தனியா என்ன பண்றதுனு வெறுத்துப்போயிருந்த சமயத்துலதான், மக்கள் நீதி மய்யம் வந்தது. கட்சி ஆரம்பிச்சப்போவே, ‘என் ஓட்டு உங்களுக்குத்தான்’னு கமல் சார்கிட்ட சொல்லிட்டேன். பிறகு அவரோட செயல்பாடுகளை கவனிச்சேன். டெல்லியில கெஜ்ரிவால் பண்ணார்ல... அப்படி ஒரு மாற்றத்தைவிட அதிகமா இவர் பண்ணுவார்னு நம்பினேன். ஏன்னா, எனக்கு கெஜ்ரிவாலை பெர்சனலாத் தெரியாது. கமல் சார் பற்றி ஏ டு இஸட் தெரியும். அவர் சிந்தனை, அவருக்கிருக்கிற அறிவு, பழக்க வழக்கம் எல்லாம் தெரியும்.”

“கமல்ஹாசன் தமிழ்நாட்டு கெஜ்ரிவால்!”

“கோவை சரளாவின் அரசியல் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது?”

“அப்படியே மேல பாருங்க... அப்போ நான் குட்டிப் பொண்ணு. எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ஃபேன். அவரைப் பார்த்துடணும்னு கனவு. அடிக்கடி கோயம்புத்தூர் பக்கம் வருவார். வந்தா, ரெட்டை ஜடை போட்டுக்கிட்டு முயல்குட்டி மாதிரி எப்படியாவது அவர் முன்னாடி நிற்பேன். கடவுளை நேர்ல பார்த்தா எப்படி இருக்குமோ, எம்.ஜி.ஆர் எனக்கு அப்படி! அவரும் என்னைக் கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கார். ஒருநாள் கூப்பிட்டு, ‘எதுக்கு அடிக்கடி வந்து நின்னுக்கிட்டு இருக்கே’னு கேட்டுட்டார். ‘தலைவா...’னு கத்தணும்போல இருந்துச்சு. ‘நான் உங்க ரசிகை, உங்களைத் தொட்டுப் பார்த்துக்கட்டுமா?’னு கேட்டு, தொட்டுப் பார்த்தேன். கன்னத்தைக் கிள்ளி விளையாண்டேன். போட்டோ எடுத்துக்கிட்டேன். அவருக்குக் கைகொடுத்து, அதை நாள் முழுக்கக் கழுவாம ஸ்பூன்ல சாப்பிட்டேன். அவர் மேலே இருந்த ரசனை, கட்சி மேடையில பேசவெச்சது. அவரைப் பார்த்துக்கிட்டே ஸ்டேஜ்லேயே தூங்கியிருக்கேன்.

அப்படி ஒருமுறை கோயம்புத்தூர்ல ஒரு மாநாட்டுக்கு வந்தப்போ, என்னைப் பார்த்துட்டார். ‘மேடையில எல்லாம் இந்த வயசுல பேசக் கூடாது, ஒழுங்காப் படி. படிப்பை முடிச்சுட்டு என்னை வந்து பாரு, கட்சியில சேர்ந்துக்கலாம்’னு சொன்னார். பிறகு, அரசியல் டச்சே இல்லை; சினிமாவுக்கு வந்துட்டேன். அவருக்குப் பிறகு, கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாடி ஜெயலலிதா மேடம் விடாம கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்கனு அதிமுக-வுக்காகப் பிரசாரம் பண்ணினேன். அங்கே கட்சிக்காரங்க அடிக்கிற ‘ஜிங் ஜாங்’ தாங்க முடியலை, கால்ல விழுறது பிடிக்கலை. இனிமே அரசியலே வேணாம்னு வந்துட்டேன்.”

“இப்போ இருக்கிற அரசியல் சூழலையும், ஆட்சியையும் எப்படிப் பார்க்குறீங்க?”

“அரசியலாங்க நடக்குது இங்கே... கேவலமா, மட்டமா இருக்கு. பிரில்லியன்ட்டா இருந்த தமிழ்நாட்டை காமெடி பீஸ் ஆக்கிட்டாங்க.”

கே.ஜி.மணிகண்டன் - படங்கள்: பா.காளிமுத்து