`அடிச்சுத் தூக்கு’ பாட்டு கேட்டு, வயித்துல வளர்ற குழந்தை உதைச்சது! - அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி | TV couple amith bargav-sri ranjani shares happiest moments of their life

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (19/02/2019)

கடைசி தொடர்பு:13:33 (19/02/2019)

`அடிச்சுத் தூக்கு’ பாட்டு கேட்டு, வயித்துல வளர்ற குழந்தை உதைச்சது! - அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி

சின்னத்திரைத் தம்பதி அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி ஜோடி உற்சாகமாக இருக்கிறது. தம்பதியினருக்கு இது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் யெஸ், விரைவில் அப்பா அம்மா ஆகிறது இந்த ஜோடி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம் 2016-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரஞ்சனி தாய்மை அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அமித் பார்கவ்

அமித்திடம் பேசினோம். ``ரொமப் சந்தோஷமா இருக்கு. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க எங்க வீட்டுக்கு ஒரு ஜீவன் வரப்போகுது. பொண்ணா பையனான்னு எதிர்பார்ப்பா இருக்கு’’ என்றவர், ``ஒரு விஷயம் சொல்லட்டுமா, ரஞ்சனி வயித்துக்குள்ள வளர்கிற எங்க குழந்தை இப்பவே தினமும் `த’ தாலாட்டு கேட்டபடியேதான் தூங்குது’’ என்கிறார்.

அஜித்துடன் `ஆரம்பம்’ படத்தில் நடித்திருக்கும் அமித் சிறப்பாகப் பாடவும் செய்வார் என்பதால், `விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற `கண்ணான கண்ணே’ பாடலை தினமும் இரவு மனைவி ரஞ்சனி வயிற்றின் அருகே சென்று பாடுகிறாராம். `இப்படியொரு சந்தோஷமான தருணத்தில் சிறப்பாகப் போய்க்கொண்டிருந்த `நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரிலிருந்து வெளியேறிவிட்டீர்களே’ என்றோம்.

அமித் பார்கவ்

`ஆமா, கொஞ்சம் ரிஸ்கான முடிவுதான். ஆனா எனக்கு அவசியமாகப் பட்டது. நான் பெங்களூருவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது சினிமாவுல நடிக்கணும்னுதான். அதனாலதான் டிவியிலயிருந்து வெளியேறினேன்’ என்கிறார்.

ஸ்ரீரஞ்சனி பேசுகையில், `பையனோ, பொண்ணோ, இப்பவே புள்ளய அஜித் ரசிகராக்கிட்டார். `கண்ணான கண்ணே’ பாடலைக் கேட்கிறப்ப வயித்துக்குள்ள அமைதியாகவே இருந்துட்டு இருந்ததா, ஒருநாள் பாட்டை மாத்தி `அடிச்சுத் தூக்கு’ பாடலைப் பாடச் சொன்னேன். சொன்னா நம்ப மாட்டீங்க, அந்தப் பாட்டைக் கேட்ட மறு நிமிஷம், என் வயித்துக்குள் அப்படியொரு உதை விழுந்தது’ எனப் பூரிக்கிறார்.


[X] Close

[X] Close