`என்ன நடந்ததுன்னு புரொடியூசரிடம் கேட்டுக்கோங்க!'- 'அவளும் நானும்' மௌனிகா பதில் | avalum nanum director dhanush quit from serial

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (21/02/2019)

கடைசி தொடர்பு:12:46 (21/02/2019)

`என்ன நடந்ததுன்னு புரொடியூசரிடம் கேட்டுக்கோங்க!'- 'அவளும் நானும்' மௌனிகா பதில்

'அவளும் நானும்' தொடரிலிருந்து திடீரென இயக்குநர் தனுஷ் விலகியதன் பின்னணியில் `மீ டூ' புகார் இருப்பதாகக் கிசுகிசுக்கிறது டிவி ஏரியா.

என்ன நடந்தது என விசாரித்தோம். பெயரைக் குறிப்பிட விரும்பாத சிலர், `பகல் ஸ்லாட்ல ஒளிபரப்பாகிட்டிருந்த 'அவளும் நானும்' தொடர்ல ஹீரோயினா நடிச்ச மௌனிகாவுக்கும் டைரக்டருக்கும் இடையில் `மீ டூ' டைப் பிரச்னை. மௌனிகா புரொடியூசர் தரப்புல புகார் செஞ்சாங்க. மேற்படி புகாரின் பேரில்தான் புரொடியூசரும் சேனலும் டைரக்டரை மாத்த முடிவு செய்ய, இப்ப இயக்குநரை அதே சேனல்ல அந்த புரொடியூசர் தயாரிக்கிற இன்னொரு சீரியலான 'அரண்மனைக் கிளி'யை இயக்கச் சொல்லியிருக்காங்க' என்றனர்.

மௌனிகாவிடம் பேசினோம்.

மௌனிகா

'என்ன நடந்ததுன்னு நீங்க புரொடியூசர் தரப்புலயே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க' என முடித்துக்கொண்டார்.

தயாரிப்பாளர் தரப்பிலோ 'சீரியல் பத்தி எந்த விஷயம்னாலும் சேனல்லதான் கேக்கணும்' என்கிறார்கள்.

இயக்குநர் தனுஷிடமே பேசினோம்.

`அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே. பிரைம் டைம்ல சீரியல் இயக்க வாய்ப்பு வந்தா எந்த இயக்குநர் மறுப்பார். அப்படித்தான் `அரண்மனைக் கிளி'க்கு நான் வந்தேன்' என்கிறார் இவர்.


[X] Close

[X] Close