பாக்யராஜ், ரச்சிதாவுடன் குட்டிப் பசங்களுக்கு மார்க் போட வரும் தேவயாணி! | new serials launched in zee tamil

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (05/03/2019)

கடைசி தொடர்பு:17:57 (05/03/2019)

பாக்யராஜ், ரச்சிதாவுடன் குட்டிப் பசங்களுக்கு மார்க் போட வரும் தேவயாணி!

ஜீ தமிழ் சேனலின் சக்ஸஸ்ஃபுல் ஷோவான `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ மூன்றாவது சீஸன் வரும் மார்ச் 10 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. கே.பாக்யராஜ், ரச்சிதாவுடன் இந்த சீஸனில் நடிகை தேவயாணியும் குட்டீஸ்களுக்கு மார்க் போடும் ஜட்ஜாக வருகிறார்.

இந்த ஷோவுடன் சேனலில் புதிய சீரியல்களாக, `பிரியாத வரம் வேண்டும்’, `கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’, `சத்யா’ உள்ளிட்ட மூன்று தொடர்கள் மற்றும் மியூசிகல் கேம் ஷோவான `பேட்ட ராப்’ ஆகியவற்றின் லாஞ்ச் குறித்து அறிவித்த நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்தது.

ரச்சிதா

`ஆபீஸ்’ தொடரில் நடித்த விஷ்ணு, நடிகை சீமா, கிருஷ்ணப் பிரியா என புதுத் தொடர்களில் நடிக்கிற நட்சத்திரங்கள் பங்கேற்றனர். புதுத் தொடர்களின் புரொமோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து சேனல் புரொகிராம் ஹெட் தமிழ்தாசன், ஜீ தென்னிந்திய மொழிகள் நிர்வாகத் தலைவரான சிஜூ பிரபாகரன் இருவரும் புதிய நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினர். தொகுப்பாளர்கள் அர்ச்சனா, கமல், தீபக், ஆகியோருடன் ரச்சிதாவும் மேடையேறினார். கணவருடன் சேர்ந்து ரச்சிதா தயாரித்து வரும் சீரியலும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.


[X] Close

[X] Close