ரமணியம்மாள் நிலத்துக்கான பத்திரப்பதிவு தாமதமானது ஏன்? - ஜீ தமிழ் விளக்கம் | zee tamil channel's reply regarding ramaniammal land issue

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (25/03/2019)

கடைசி தொடர்பு:18:29 (25/03/2019)

ரமணியம்மாள் நிலத்துக்கான பத்திரப்பதிவு தாமதமானது ஏன்? - ஜீ தமிழ் விளக்கம்

கடந்தாண்டு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சரிகமப’ நிகழ்ச்சியில் ரசிகர்களால் ‘ராக் ஸ்டார்’ எனக் கொண்டாடப்பட்டு, இறுதிச் சுற்றில் இரண்டாமிடமும் பிடித்த ரமணியம்மாள், தனக்கான நிலம் ஓராண்டாகியும் கிடைக்கவில்லை' எனப் பேசியிருந்த பேட்டி, நேற்றைய தினம் விகடன்.காமில் வெளியானது.

இன்று ’ஜீ தமிழ்’ சேனல் தரப்பில் நம்மை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொண்டனர். கட்டுரை தொடர்பாக சேனல் அளித்துள்ள விளக்கம் அப்படியே கீழே..

ரமணியம்மாள்

கடந்த ஏப்ரல் 2018’ல் நடந்த 'சரிகமப சீனியர்ஸ்' இறுதி சுற்றுப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற ரமணியம்மாள் அவர்களுக்கு நான்கு லட்ச ருபாய் பணப் பரிசு வழங்குவதாக ஜீ தமிழ் அறிவித்திருந்தது. அதன்படி பரிசு அறிவித்த ஒரு வாரத்தில் பிடித்தங்கள் போக அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது, இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்பான்சராக வந்த கம்பெனி ரமணியம்மாள் அவர்களுக்கு ஐந்து லட்சம் மதிப்பிலான விவசாய நிலம் வழங்குவதாகவும் அறிவித்தது. இதை மேற்கொண்டு பார்க்கும்பொழுது, நிலத்தை பட்டா போட்டுத் தர தேவையான ஆவணங்கள் (பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை) ரமணியம்மாளிடம் இல்லாததனால் நிலத்தைப் பதிவு செய்வதில் சிறு தாமதம் ஆகி உள்ளது. இப்பொழுது அனைத்து ஆவணங்களும் பெற்றாகி விட்டன. இன்று வரை ரமணியம்மாளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொண்டுதான் உள்ளோம் இந்த ஆவணங்களைப் பெறுவதற்கான உதவிகளைச் செய்தததும் நாங்களே. அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கான பத்திரப்பதிவு இந்த வார இறுதிக்குள் முடிக்கப்படும்.