`மறுபடியும் அந்த சம்பவம் நடக்காம பார்த்துக்கணும்!' – ரீ என்ட்ரி ஆகும் ஜோடி ‘ஜூலி’ | jodi julie's re entry in sathya serial

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:16:30 (31/03/2019)

`மறுபடியும் அந்த சம்பவம் நடக்காம பார்த்துக்கணும்!' – ரீ என்ட்ரி ஆகும் ஜோடி ‘ஜூலி’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘சத்யா’ தொடரில் ஹீரோவுக்குச் சித்தியாக நடிக்கிறார் ஜூலி. ‘ஜோடி’யில் ஆடிய ஜூலி. தனக்குப் பிறகு சின்னத்திரைக்கு வந்த ‘பிக் பாஸ்’ ஜூலியால் தன் வாய்ப்புகள் பறிபோனதாகச் சொன்னவர். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது, போட்டி சேனலின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதால், அந்த சீரியலிலிருந்து வெளியேற்றப்பட்டவர். இதனால் சீரியல் எதுவும் இல்லாமல் வீட்டிலிருந்தவருக்கு ‘சத்யா’ தந்திருக்கிறது சந்தோஷம்.

.

ஜோடி ஜூலி

அவரிடம் பேசினோம் ‘’ரொம்ப ரிஸ்கா இருக்குங்க ஃபீல்டு. முன்னாடில்லாம் சேனல்கள் குறைவா இருந்தாலும் ஆர்ட்டிஸ்டுகளுக்கு வாய்ப்பு நல்லா இருந்தது. இன்னைக்கு நிறைய சேனல்கள் வந்திடுச்சு. ஆனாலும் ஆர்ட்டிஸ்டுகளுக்கு வேலை கிடைக்கிறதுல முன்னவிட பெரும்பாடா இருக்கு. எங்க மிஸ்டேக்னு தெரியலை.

வாய்ப்பு இல்லாத காலங்களில் வாழ்க்கை நடத்துவது பெரும் சவாலா இருக்கு. பெரும்பாலான சீரியல் ஆர்ட்டிஸ்டுகளோட நிலைமை இன்னைக்கு இப்படித்தான்.  ‘சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை’னு வர்ற செய்திகள்லாம் ‘வாய்ப்பு’ங்கிற இந்த ஒரு வாழ்வாதாரம் பாதிக்கப்படறதுனால வர்றதுதான். ஆனா, புலம்பிட்டே இருந்தா இதுக்கெல்லாம் தீர்வு கிடைச்சிடுமா?

வேற வழியே இல்லை. நாலு கம்பெனி ஏறி இறங்கி வாய்ப்பு கேக்கறதுல தப்பு இல்லை. நான் அப்படித்தான் கேட்டேன். இந்தா கிடைச்சிருக்கு இல்லையா? இப்பக்கூட சிலர் ’’அதுக்குள்ள சித்தி வேடத்துக்கு கமிட் ஆகிட்டீங்களே’னு கேட்டாங்க. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி ஆளுங்களைத்தான் கிட்டவே சேர்க்கக் கூடாதுனு சொல்வேன். ’அம்மா வேடமோ, சித்தி வேடமாங்கிறது முக்கியமில்லை, அந்த வாய்ப்பு கூட இல்லாம வீட்டுல இருந்தா இவங்களா வந்து சோறு போடப் போறாங்க? அதனால அப்படிக் கேக்கறவங்க பக்கமே திரும்பறதில்லை’ என்றவர், ’அதேநேரம் இனி கவனமா இருக்கணூம்கிறதுலயும் தெளிவா இருக்கேன். பழைய மாதிரி சம்பவம் நடக்காமல் பார்த்துக்கணுமில்லையா’’ எனச் சிரிக்கிறார்.

’ஒரு சீரியலில் நடிக்கிற போது இன்னொரு சீரியலிலோ சேனலிலோ தலைகாட்டாமல் இருக்க வேண்டும்’ என்பதைச் சுட்டிக்காட்டவே முன்பு நடந்த நிகழ்வை ’பழைய சம்பவம்’ என்கிறார் ஜூலி.