ஆமாங்க, நாங்க அம்மா ஆகப் போறோம்! - ‘பிக் பாஸ்’ சுஜா வருணி, ‘ஜோடி’ ப்ரியா | actress suja varuni, jodi priya anounces their pregnancy

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:44 (06/04/2019)

ஆமாங்க, நாங்க அம்மா ஆகப் போறோம்! - ‘பிக் பாஸ்’ சுஜா வருணி, ‘ஜோடி’ ப்ரியா

’பிக் பாஸ்’ சுஜா வருணி, ‘ஜோடி’ ப்ரியா இருவரும் அம்மா ஆகப்போகிற சந்தோஷச் செய்தியைப் பகிர்கிறார்கள்

இன்ஸ்டாகிராமில் இந்த வாரம், ‘அம்மா ஆவதை அறிவிக்கும் வாரம்’ போல, அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகள். முதலில் ‘ஜோடி’ ஷோவில் ஆடிய ‘சரவணன் மீனாட்சி’ ப்ரியா தனக்கு வளைகாப்பு நடந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில், பிரபல கார் கம்பெனியில் பணிபுரியும் சுந்தர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவர் இவர்.  திருமணம் முடிந்ததும் தாய்லாந்திலுள்ள க்ராபி தீவுகளுக்குத் தேனிலவுக்குச் சென்றார். அடுத்து, டிவி-க்கு பிரேக் விட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ப்ரியாவிடம் பேசினோம்.

சுஜா வருணி

ஆமாங்க, நான் அம்மா ஆகபோறேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு இந்தத் தருணம். வேறென்ன சொல்ல, கடவுளுக்கு தேங்க்ஸ்’ என்கிறார்.

ஜோடி ப்ரியா

அம்மா ஆகப்போகிற இன்னொரு பிரபலம், ‘பிக் பாஸ்’ புகழ் சுஜா வருணி. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார்-சுஜா திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.
சுஜா அம்மா ஆகப்போவதை இன்ஸ்ட்ராகிராமில் அறிவித்திருக்கும் சிவக்குமார், மனைவிக்கு வாழ்த்துகளைச் சொல்லியிருப்பதோடு, ஆவலுடன் தன் குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.