`விஜய் அண்ணாவுக்கு மட்டுமில்ல, அவரின் ரசிகர்களுக்கும் நான் செல்லம்தான்’ - சிலிர்க்கும் ஜெனிஃபர் | actress sunday galatta jeniffer interview

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (16/04/2019)

கடைசி தொடர்பு:17:50 (16/04/2019)

`விஜய் அண்ணாவுக்கு மட்டுமில்ல, அவரின் ரசிகர்களுக்கும் நான் செல்லம்தான்’ - சிலிர்க்கும் ஜெனிஃபர்

’சண்டே கலாட்டா’வில் ஓராண்டுப் பயணம்குறித்து நடிகை ஜெனிஃபர் பேசுகிறார்

சன் டிவி-யில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ’சண்டே கலாட்டா’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். மதுரை முத்து - தேவதர்ஷினி காம்பினேஷனில் ஒளிபரப்பாகிவந்த  ஷோவிலிருந்து,  கடந்த ஆண்டு திடீரென வெளியேறினார் தேவதர்ஷினி. தற்போது, தேவதர்ஷினிக்குப் பதிலாக ’கில்லி’ ஜெனிஃபர் மதுரை முத்துவுடன் சேர்ந்து காமெடி செய்துகொண்டிருக்கிறார்.
‘ஓராண்டு அனுபவம் எப்படி இருந்தது’ என ஜெனிஃபரிடம் கேட்டேன்.

ஜெனிஃபர்

’இந்த நிகழ்ச்சிக்கு கமிட் ஆனபோது, பல யோசனைகள் வந்து போச்சு. எனக்கு ரொம்பவே சீனியரான தேவதர்ஷினி பண்ணிய மாதிரி பண்ண முடியுமான்னு முதல்ல யோசிச்சேன். ஆனா, என் மேல  எனக்கு எப்பவுமே கான்ஃபிடென்ட் இருக்கும்கிறதால, அதைக் கடந்துட்டேன். இன்னொருபுறம், காமெடி ஷோங்கிறதால சினிமாவுலயும் காமெடிக்குத்தான் செட் ஆவேன்னு நினைச்சிடுவாங்களோன்னு பயந்தேன்.  இருந்தாலும் வீடு ப்ளஸ் சில நெருக்கமான நண்பர்கள் தந்த தைரியத்துடன், ‘சரி, பார்த்துடலாம்’னு இறங்கினேன்.

ஜெனிஃபர்

இப்ப திரும்பிப் பார்க்கிறப்ப, எனக்குள்ள ரொம்பவே பாசிடிவ்வான மாற்றம். கலகலப்பான ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் என்னை எப்பவுமே எனர்ஜெட்டிக்கா வச்சிருக்கு. அங்க பேசற டைமிங், ரைமிங் காமெடிகளை வீட்டுலயும் சமயங்கள்ல எடுத்து விடுவேன். இதனாலேயே, எங்க அம்மா என்னை இவ்ளோ நாளும் இல்லாத புதுப் பழக்கமா,  ‘வாயாடி’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. என்னோட நகைச்சுவை உணர்வு, இந்த ஒரு வருஷத்துல கூடியிருக்குங்கிறதும் உண்மைதான்.
அப்புறம், இந்த ஒரு வருஷத்துல மறக்க முடியாத அனுபவம்னா, 'கில்லி’யை ஸ்பூஃப் பண்ணினதுதான். 15 வருஷம் கழிச்சு, அதே ’தளபதி தங்கச்சி’ கேரக்டரை திரும்பவும் நடிச்ச அனுபவம் சிலிர்ப்பா இருந்தது. விஜய் அண்ணா என் முன்னாடி இல்லாத ஒரு குறைதான், மத்தபடி ‘கில்லி’ பார்ட் 2 பண்ணின எஃபெக்ட் இருந்தது. ஃப்ரெண்ட்ஸ் சிலர், ‘விஜய் சார் படத்தை ஸ்பூஃப் பண்றீங்க, அவரது ரசிகர்கள் வச்சு செய்யப் போறாங்க’ன்னு பயமுறுத்துனாங்க. ஆனா, எனக்கு எதுவும் தப்பா தெரியலை. ஏன்னா, விஜய் அண்ணாவுக்கு மட்டுமில்ல, அவரோட ரசிகர்களுக்கும் நான் செல்லம்தான்’ எனச் சிரிக்கிறார்.