`கல்யாணத்துக்கு முன்னாடி பிரச்னை சரி ஆகும்னு நம்பறோம்!' - `ராஜா ராணி’ ஆல்யா மானசா | raja rani aalya manasa talks about sanjeev's altophobia

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (16/05/2019)

`கல்யாணத்துக்கு முன்னாடி பிரச்னை சரி ஆகும்னு நம்பறோம்!' - `ராஜா ராணி’ ஆல்யா மானசா

`ராஜா ராணி’ ஆல்யா மானசா, சஞ்சீவுக்கு இருக்கும் `அல்டோஃபோபியா' பிரச்னை குறித்து மனம் திறக்கிறார்.

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான `ராஜா ராணி’ சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சீவுக்கு சிறு வயது முதலே `அல்டோஃபோபியா’ பிரச்னை இருந்து வருகிறதாம். வேறொன்றுமில்லை, உயரத்தைக் கண்டு பயப்படுவது.

ஆல்யா

`படியேறி வீட்டு மொட்டை மாடிக்குப் போறதுக்கே பயப்படுவேன். ஃப்ரெண்ட்ஸ் கிண்டல், கேலி பேசுவாங்க. வளர்ந்த பிறகு இந்தப் பிரச்னை சரியாகிடும்னு நம்பினேன். ஆனா அதிகமாச்சே தவிர, சரியாகலை. இதனால லிஃப்ட், எஸ்கலேட்டர்ல போகப் பயப்படுவேன். சம்மர்ல ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான மலைப்பிரதேசங்களுக்கு டூர் போறதுன்னாலும் பயம். சினிமாவுக்கு முயற்சி செய்தப்ப, இது ஒரு பெரிய பிரச்னையா வந்து நின்னுச்சு. `இது மன வியாதியா’, `யார்கிட்டப் போய் இதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கணும்’கிற மாதிரி பல கேள்விகள் வந்து போனதே தவிர, நான் எந்த முயற்சியும் பண்ணாததால தீர்வு கிடைச்சபாடில்லை. `டைரக்டர்கள்கிட்ட `எனக்கு இந்த மாதிரியொரு பிரச்னை இருக்கு’ன்னு சொல்லவும் தயக்கம்; மறைக்கவும் பயம். சினிமாவுல இருந்தப்ப கூட இந்தச் சிக்கலை கடந்து வந்துட்டேன். சீரியலுக்கு வந்த பிறகு இப்பதான் முதன்முதலா வசமா மாட்டினேன்’ என்றவர், சிங்கப்பூரில் சமீபத்தில் இயக்குநரிடம் திட்டு வாங்கியது குறித்துக் கூறினார்..

ஆல்யா

`ராஜா ராணி’ ஷூட்டிங் சிங்கப்பூர்லனதும் நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஏன்னா சிங்கப்பூர் போறது இதுதான் முதல் தடவை. போய் இறங்கின மறுநாள் காலையிலேயே நான் எதிர்பார்க்காத அந்தச் சிக்கல். ஷூட்டிங் ஸ்பாட் போனா, தீம் பார்க் மாதிரியான ஒரு இடம். `நானும் செம்பாவும் உயரத்துல இருந்து குதிக்கணும்கிறதுதான் சீன். நீங்க டிவியில பார்த்திருப்பீங்களே, அந்த சீன் ஓ.கே ஆகறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் இருக்கே, பெரிய அவமானமா போச்சு. ‘இந்தப் பிரச்னையையெல்லாம் சரி செஞ்சுட்டுல்ல நீங்க நடிக்க வந்திருக்கணும்’னு கேட்டுட்டார் இயக்குநர் பிரவீன் பென்னட். நடிக்க வந்த பிறகு இந்தப் பிரச்னையால நான் பட்ட முதல் அவமானம் இது’ என சஞ்சீவ் நிறுத்த, தொடர்ந்தார் ஆல்யா..

ஆல்யா

`எங்கிட்ட ஏற்கெனவே இந்தப் பிரச்னை குறித்துச் சொல்லிருக்கான் சஞ்சீவ். ஆனா அவனைப் போலவே எனக்கும் இதைச் சரி செய்ய என்ன செய்யணும்; யாரைப் பார்க்கணும்னெல்லாம் தெரியாது. அதனால அப்படியே விட்டுட்டேன். ஆனா அன்னைக்கு டைரக்டர்கிட்ட திட்டு வாங்கினப்பதான் இதோட விபரீதம் புரிஞ்சது. மறுபடியும் சினிமா வரவேற்குதுனு வச்சுக்கோங்களேன், அப்பல்லாம் இந்தப் பிரச்னை அப்படியே இருந்தா நல்லாவா இருக்கும்? அதேநேரம் தானாகவே இந்தப் பிரச்னையில இருந்து மீண்டு வர முயற்சி செய்திட்டிருக்கான் சஞ்சீவ். நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்கிள்ல விசாரிச்சப்ப, இந்தப் பிரச்னையில இருந்து மீண்ட சிலர்கிட்டயே பேசினேன். அவங்க கைடு பண்றதா சொல்லியிருக்காங்க. கல்யாணத்துக்கு எப்படியும் இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுக்கு முன்னாடியே இந்தப் பிரச்னை சரியாகிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்கிறார் ஆல்யா.