மிஸ்டர் அண்டுமிசஸ் சின்னத்திரை.. டைட்டில் வின்னர் யார்? | mr & mrs chinnathirai 2019 title winner details revel

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (18/05/2019)

கடைசி தொடர்பு:11:37 (18/05/2019)

மிஸ்டர் அண்டுமிசஸ் சின்னத்திரை.. டைட்டில் வின்னர் யார்?

`மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை’ ரியாலிட்டி ஷோவின் இறுதிச் சுற்றில் வென்று டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சின்னத்திரையின் நிஜத் தம்பதிகள் கலந்துகொள்ளும் இந்த ரியாலிட்டி ஷோ தொடங்கியபோது, செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி, மணிமேகலை-உசேன், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, நிஷா – ரியாஸ், திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, அந்தோணிதாசன் – ரீட்டா, சுபர்ணன் – பிரியா, பிரின்ஸ் - ப்ரியா என திரளாக கலந்துகொண்டனர் டிவி தம்பதிகள்.

வின்னர் சங்கரபாண்டியன்

ஜோடிகளுக்குப் பல்வேறு சுற்றுக்கள் மூலம் பலவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. அவற்றை வெற்றிகரமாகக் கடந்து ஆறு ஜோடிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். சுபர்ணன் – ப்ரியா, ப்ரியா –பிரின்ஸ், தங்கதுரை – அருணா ஆகிய ஜோடிகள் வெளியேறினார்கள்.

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை

சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த இறுதிச் சுற்று இரண்டு சுற்றுகளாக நடந்தது. இதில் அனைத்து டாஸ்குகளிலும் வென்று `மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை 2019’ பட்டத்தை வென்றுள்ளது சங்கரபாண்டியன் – ஜெயபாரதி ஜோடி.

சங்கரபாண்டியன் இயக்குநர் பாரதிராஜா தயாரித்து வழங்கிய `தெக்கத்திப் பொண்ணு’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பிறகு `சரவணன் மீனாட்சி’ தொடர் இவருக்கு நல்ல ரீச்சைத் தந்தது. ஜெயபாரதி ஆசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை இறுதிச் சுற்றின் ஒளிபரப்பை நாளை மாலை டிவியில் காணலாம்.