Published:Updated:

``பிடிச்சவங்க கன்னத்தைக் கடிக்குறது என் வழக்கம்; அது தப்பா?!" - டிவி சர்ச்சை குறித்து நடிகை பூர்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடன நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா
நடன நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா ( Screenshot from Youtube channel - ETV Dhee )

தெலுங்கு சேனல் ஒன்றின் நடன நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குபெறும் நடிகை பூர்ணா, போட்டியாளர் ஒருவரைப் பாராட்டி முத்தமிட்டதுடன், அவரின் கன்னத்தையும் செல்லமாகக் கடித்து வைத்தார். இதை சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சினிமா பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கமானதுதான். ஆனால், நடிகை பூர்ணா தற்போது ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை, ரொம்பவே புதுசு. தெலுங்கு சேனல் ஒன்றின் நடன நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குபெறும் பூர்ணா, போட்டியாளர் ஒருவரின் நடனத் திறமையைப் பாராட்டி முத்தமிட்டார். அத்துடன் நிற்காமல், அந்த ஆண் போட்டியாளரின் கன்னத்தையும் செல்லமாகக் கடித்து வைத்தார். இதைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர். இதுகுறித்து நடிகை பூர்ணாவிடம் பேசினோம்.

நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா
`` `சசிகலா ரோல்ல நடிக்காதே'னு ஃபிரெண்ட்ஸ் மிரட்டினாங்க!" - `தலைவி' அனுபவம் பகிரும் பூர்ணா

``பலருக்கும் பலவிதமான வித்தியாசமான குணாதிசயங்கள் இருக்கும். பிடிச்சவங்களோட கன்னத்தைச் செல்லமா கடிக்குற என் குணமும் அதுபோலத்தான். என் அம்மாவின் கன்னத்தையும், குடும்பத்திலிருக்குற குழந்தைகளின் கன்னங்களையும் அடிக்கடி கடிப்பேன். தவிர, நான் பழகுறதுல குழந்தைப் பருவத்துலயோ, என் தம்பி, தங்கச்சி வயசுலயோ யாரையாச்சும் எனக்குப் பிடிச்சிருந்தா, அவங்களைப் பாராட்டி முத்தமிட்டு கன்னத்தைக் கடிக்குறது என் வழக்கம். இது தப்பா, சரியான்னு எனக்குத் தெரியல. ஆனா, திறமையான குழந்தைகளை ஊக்கப்படுத்தவும், அன்பை வெளிப்படுத்தவும் எனக்குப் பிடிச்ச வழியா நினைச்சுத்தான் இப்படிச் செய்யுறேன்.

இப்போ சர்ச்சையா சொல்லப்படுற அந்த விஷயத்துக்கு வர்றேன். நான் முத்தம் கொடுத்த அந்தப் பையனை, என் குழந்தையைப் போலத்தான் நினைக்குறேன். அந்தப் பையனோட நடனத்திறமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். `எனக்கு ஒரு குழந்தை இருந்தா, உன்னை மாதிரி நல்ல டான்ஸரா ஆக்கவே ஆசைப்படுவேன்'னு அவன்கிட்டயே பெருமையா சொல்லியிருக்கேன். அந்த நடன நிகழ்ச்சியில மூணு சீஸனா நான் நடுவரா கலந்துக்கிறேன். அந்த நிகழ்ச்சியில, போட்டியாளர்களுக்கு நான் முத்தம் கொடுக்குறதும் புதுசில்ல. நல்லா டான்ஸ் ஆடுற போட்டியாளர்கள், `மேம், எனக்கு முத்தம் கொடுத்து கன்னத்தைக் கடிக்க மாட்டீங்களா?'ன்னு உரிமையுடன் என்கிட்ட கேட்பாங்க.

நடன நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா
நடன நிகழ்ச்சியில் நடிகை பூர்ணா

என் இந்தச் செயலை அந்த நிகழ்ச்சியில யாருமே தப்பா சொன்னதில்ல. என் வயசுல இருக்குற யார்கிட்டயும் நான் இப்படி நடந்துக்க மாட்டேன். யார்கிட்ட எந்த எல்லையுடன், எப்படிப் பழகணும், நடந்துக்கணும்னு எனக்கும் தெரியும். அதனால, அன்பை வெளிப்படுத்த எனக்குப் பிடிச்ச இந்தச் செயலை யாருக்காவும் நான் மாத்திக்க மாட்டேன்" என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு