Published:Updated:

விகடன் TV: உருவகேலி தவறில்லையா?

அறந்தாங்கி நிஷா - பிரியங்கா ரோபோ சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
அறந்தாங்கி நிஷா - பிரியங்கா ரோபோ சங்கர்

‘முதன்முதலா டிவிக்கு வந்த புதுசுல வேணும்னா, இதுக்காகக் கொஞ்சம் ஃபீல் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறேன். அதுவும் சரியா ஞாபகத்துல இல்லை

உருவ கேலி என்கிற ஒரு விஷயம் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அவ்வப்போது சர்ச்சையைக் கிளப்பிவருகிறது. பிரபலமானவர்கள், நடிகர், நடிகைகளின் பாடி லாங்வேஜைக் கேலி செய்தது போய், இப்போதெல்லாம் சக ஆர்ட்டிஸ்டுகளை ஆன் தி ஸ்பாட்டில் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் சமயங்களில் முகம் சுளிக்கிற அளவுக்குக்கூடப் போய்விடுகிறது இது. ‘இதையெல்லாம் எப்படி எடுத்துக்கறீங்க?’ என இவர்களைக் கேட்டேன்.

விகடன் TV: உருவகேலி தவறில்லையா?

அறந்தாங்கி நிஷா

‘‘முதன்முதலா டிவிக்கு வந்த புதுசுல வேணும்னா, இதுக்காகக் கொஞ்சம் ஃபீல் பண்ணியிருப்பேன்னு நினைக்கிறேன். அதுவும் சரியா ஞாபகத்துல இல்லை. இப்பெல்லாம் நம்மை யாரு கலாய்க்கிறது? நாம கலாய்க்காம இருந்தாச் சரி. அடி வாங்கி அடி வாங்கி அந்த அளவுக்குப் பக்குவப்பட்டாச்சு.

ஆனா நானே பீதியான சம்பவமும் நடந்திருக்கு. அது எப்பன்னா, நானும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை பண்ணின போது. நாம தாங்கிக்கலாம். நமக்குப் பழக்கப்பட்ட ஏரியா. யாராவது ஏதாவது சொல்லி அவர் மனசு கஷ்டப்படக்கூடாதேன்னு பயத்துலயே இருந்தேன். எந்தச் சாமி புண்ணியமோ கடைசி வரை நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலைங்க.’’

விகடன் TV: உருவகேலி தவறில்லையா?

பிரியங்கா ரோபோ சங்கர்

“பட்டிமன்றத்துல சிரிக்க வைக்கிறாங்கன்னா அது ஒரு வகை. ‘கலக்கப் போவது யாரு’ மாதிரியான ரியாலிட்டி ஷோன்னா அது வேறு வகை. இந்த நிகழ்ச்சியில மேடையில வந்து நின்னாலே ஆடியன்ஸுக்கு சிரிப்பு வந்துடணும் அல்லது அவங்க செய்கிற ஒரு செயல் ஆடியன்ஸ்க்கு மகிழ்ச்சி தரணும். அதுதான் கான்செப்ட். அதுக்கெல்லாம் சம்மதிச்சுதானே நிகழ்ச்சியில கலந்துக்கறோம். இன்னொரு பக்கம் டிவி கலைஞர்களுக்கு ரியாலிட்டி ஷோங்கிறது வருமானம் தர்றதா இருக்கறதால மத்த எந்த விஷயத்தையும் பெரிசா எடுத்துக்கறதில்லை.

அதனால பாடி ஷேமிங் பண்ணி, அதன் மூலமா டி.ஆர்.பி வாங்கணும்னு திட்டமிட்டெல்லாம் யாரும் எதுவும் பண்றதில்லை. அதுவும் போக, கேமரா முன்னாடி எங்களுடைய பர்ஃபாமன்ஸும் ஒரு நடிப்புதானே! ரசிகர்களை மகிழ்விக்க நடிக்கிறோம். அதனால ஷூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட தொழில் ரீதியான இடங்கள்ல நாங்க காயம்பட்டதே இல்லை.

அதேநேரம், வெளியில கேலியா பார்க்கிறவங்களை எங்களால கண்டுபிடிக்க முடியும். உதாரணத்துக்கு துணிக்கடை போறேன்னா, என் உருவத்துக்கேத்த துணி கிடைக்காதப்ப பக்கத்துலயே நிற்கிற ஆள் கூட அந்தப் பக்கமா திரும்பி சிரிக்கறத பாத்திருக்கேன். அந்தச் சமயங்களில்தான் ரொம்பக் கஷ்டமா இருக்கும்.