Published:Updated:

`ரீல் லைப் டு ரியல் லைப் ஜோடி' சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சீரியல் நட்சத்திரங்கள்!

'சீரியல் உலகில் பிரபலமான ஜோடிகள் சிலர் தற்போது கணவன் - மனைவியாகியிருக்கிறார்கள். அவர்கள் யார், யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்!'

சீரியல் உலகில் பிரபலமான ஜோடிகள் சிலர் தற்போது கணவன் - மனைவியாகியிருக்கிறார்கள். அவர்கள் யார், யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்!

சந்திரா லக்ஷ்மன் - டோஷ் கிறிஸ்டி

சந்திரா லக்ஷ்மன் - டோஷ் கிறிஸ்டி
சந்திரா லக்ஷ்மன் - டோஷ் கிறிஸ்டி

90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொடரான 'காதலிக்க நேரமில்லை' தொடரின் நாயகி சந்திரா லக்ஷ்மன். மலையாள தொடர் ஒன்றில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தொடரில் நடிக்கும் டோஷ் கிறிஸ்டி என்பவரை காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார். 38 வயதில் தனக்கான துணையை கண்டுபிடித்து கரம் பற்றியிருக்கிறார். அக்டோபரில் கல்யாண அறிவிப்பை ரசிகர்களுக்கு தெரிவித்து நவம்பரில் திருமணம் செய்திருக்கிறார்கள். சந்திரா ஹிந்து, டோஷ் கிறிஸ்டியன் என்பதால் பொதுவான ஒரு ஹாலில் தாலி, செயின் என இரண்டு மதத்துக்குமான தாலிகளை ஒரே செயினில் இணைத்து கட்டியிருக்கிறாராம்.

யாழினி - வினோத்

யாழினி - வினோத்
யாழினி - வினோத்

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீ வருவாய் என' தொடரில் இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக நடிக்கிறார்கள். நடிக்கும்போது ஒருவருக்கொருவர் பிடித்துப் போக இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன் - மனைவியாகியிருக்கிறார்கள். பெரியவர்கள் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றுள்ளது. யாழினி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜபார்வை' தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷபானா - ஆர்யன்

ஷபானா - ஆர்யன்
ஷபானா - ஆர்யன்

'பாக்கியலட்சுமி' தொடரின் மூலம் செழியனாக அறிமுகமான ஆர்யனும், 'செம்பருத்தி' தொடர் நாயகி ஷபானாவும் காதலிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியானது. இருவரும் மாறி, மாறி அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த கம்மெண்ட்ஸ் வெளிப்படையாகவே இவர்கள் காதலிக்கிறார்கள் என்பதை சொன்னது. ஆனாலும் இருவரும் மெளனமாக இருந்தார்கள். கடந்த மாதம் இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஷபானா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுடைய காதலை உறுதிபடுத்தியிருந்தார். இந்நிலையில், இவர்களுடைய திருமணம் திடீரென நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. எளிமையாய் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

ரேஷ்மா - மதன்

ரேஷ்மா - மதன்
ரேஷ்மா - மதன்

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' தொடரில் நடித்த போது நண்பர்களாக பழகி, பின் இருவரும் காதலர்களாகியிருக்கிறார்கள். புத்தாண்டு அன்று தங்களுடைய காதலை வெளிப்படையாக சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். ஏற்கெனவே திருமண தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் கொரோனா லாக்டவுண் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'அபி டெய்லர்' என்கிற தொடரில் நடிக்கிறார்கள். இந்நிலையில், இவர்களுடைய திருமணம் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு நடிகர் சிம்பு வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறாராம்.

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா
சித்து - ஸ்ரேயா

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடரின் மூலம் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமானவர்கள் 'சித்து - ஸ்ரேயா'. சீரியலில் நடிக்கும்போதே இருவரும் காதலிக்கிறார்கள் என தகவல்கள் வெளியானது. ஆனால் அவர்கள் அந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. இந்த ஜோடி சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது. இருவரும் லிவ்விங் டு கெதரில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் திடீரென தங்களுடைய திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அறிவித்து ஷாக் கொடுத்தார்கள். கடந்த 21ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. ரீல் டு ரியல் ஜோடியான இந்த தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு