Published:Updated:

விகடன் TV: “ஷிவாங்கி மேல சந்தேகப்பட்டேன்!”

கனி
பிரீமியம் ஸ்டோரி
கனி

கிருஷ்ணா; படம்: சுரேஷ்

விகடன் TV: “ஷிவாங்கி மேல சந்தேகப்பட்டேன்!”

கிருஷ்ணா; படம்: சுரேஷ்

Published:Updated:
கனி
பிரீமியம் ஸ்டோரி
கனி

ஒரு ரியாலிட்டி ஷோ பார்க்க பெருங்கூட்டமே வீக்கெண்டுக்காக காத்திருந்தது, சமூக வலைதளங்கள் முழுக்க அதைப்பற்றியே பேசுவது என குக்கு வித் கோமாளி சீசன் 2 செய்த வித்தைகள் ஏராளம். முடிவுக்கு வந்துவிட்ட இந்த சீசனின் டைட்டில் வின்னர் கனியிடம் பேசினேன்.

விகடன் TV: “ஷிவாங்கி மேல சந்தேகப்பட்டேன்!”

`` ‘காரக்குழம்பு கனி’ன்னு கூப்பிடுவது உங்களுக்குப் பிடிக்குதா?’’

‘‘புடிக்குது புடிக்காதுன்னுலாம் இல்ல. யாரு என்னை அப்படிச் சொல்லிக் கூப்பிட்டாலும் நான் ஏத்துப்பேன். அவங்க கூப்பிடுறதே ஒருவகையில அன்போட வெளிப்பாடுதானே.’’

``உண்மையான கனியின் முகம் எப்படி இருக்கும்?’’

‘‘பெயரைப் போல கனிவாவே இருக்கும். எல்லா விஷயத்தையும் பாசிட்டிவா எடுத்துக்குற ஆள் நான்.’’

``குக்கு வித் கோமாளி முதல் சீசன் பிடிச்சிருந்ததா?’’

“நிரஞ்சனி மற்றும் என் குழந்தைகள் மூலமாதான் எனக்கு அந்த சீசன் அறிமுகம். என் அப்பா வீடு பக்கத்துலதான். அங்க போனா, எல்லாரும் ஏதோ ஒரு ஷோவைப் பார்த்து சிரிச்சுட்டே இருப்பாங்க. நானும் குழந்தைகளைத் திட்டிட்டே இருப்பேன். ‘அக்கா, திட்டாதீங்க. அது ரொம்ப நல்ல ஷோ. சூப்பரா இருக்கும்’னு நிரஞ்சனி சொல்லுவா. ஆனா எனக்குத்தான் அப்போ முதல் சீசன் பாக்க நேரம் கிடைக்கல. சீசன் 2-க்கு ஓகே சொன்னதும்தான் பார்த்தேன்”

``குக்கு வித் கோமாளி உங்களுக்கு என்ன மாதிரியான பாடம் கத்துக் கொடுத்தது?’’

“சிம்பு சார் வந்தப்போகூடச் சொன்னாங்க, இந்த ஷோ ஒரு வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொடுக்குது. வாழ்க்கை நமக்கு நிறைய பிரச்னைகளைக் குடுக்குது. பிரச்னைகள் கோமாளிகள் மாதிரிதான், அதைச் சரியா ஹேண்டில் பண்ணிட்டாலே சமாளிச்சுடலாம்னு. அதைத்தான் நான் இப்போ ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.”

விகடன் TV: “ஷிவாங்கி மேல சந்தேகப்பட்டேன்!”

``உங்களுக்குப் பிடிச்ச, பிடிக்காத உணவுன்னா எதைச் சொல்லுவீங்க?’’

“இட்லி எப்போ குடுத்தாலும் சாப்பிடுவேன். நான் இட்லிப் பைத்தியம். இன்னொன்னு, சுடச்சுட உப்புமா. பீட்சா, பர்கர் பிடிக்கவே பிடிக்காது. அந்தமாதிரியான உணவுகளை என்கரேஜ் பண்ணவே மாட்டேன்.”

``குக் வித் கோமாளி என்ட்ரிக்கு முன்னாடி நீங்க முதல் சீசன் பார்த்து ஒருத்தர் மேல இருந்த கணிப்பு முற்றிலும் மாறுபட்டிருக்கா?’’

“ஷிவாங்கிய பார்த்து, ‘ஒருத்தர் எப்படி இப்படி இருப்பாங்க, இதெல்லாம் சும்மாவோ’ன்னு ஒரு சந்தேகம் இருந்தது. உள்ள வந்ததுமே என்னோட கணிப்பு முற்றிலும் தப்பாப்போச்சு. உண்மையாவே அந்தப் பொண்ணு க்யூட்.”