Published:Updated:

மணாலியில் ஹனிமூன், திருப்பதியில் தலைதீபாவளி - `செம்பருத்தி’ பாரதா

பாரத், பாரதா
பிரீமியம் ஸ்டோரி
பாரத், பாரதா

கொண்டாட்டம்

மணாலியில் ஹனிமூன், திருப்பதியில் தலைதீபாவளி - `செம்பருத்தி’ பாரதா

கொண்டாட்டம்

Published:Updated:
பாரத், பாரதா
பிரீமியம் ஸ்டோரி
பாரத், பாரதா

``எங்கக் காதலின் அடையாளமா வீடு முழுக்க சந்தோஷம் நிரம்பி வழியுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் கொண்டாடித் தீர்த்துட்டு இருக்கோம்” - மலர்ச்சியுடன் ஆரம்பிக்கிறார் பாரதா. செம்பருத்தி சீரியலில் மித்ராவாக மிரளச் செய்பவர். அதே சீரியலில் துணை இயக்குநராகப் பணியாற்றிய பாரத் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் கரம் பிடித்தார். பாரதா - பாரத் தம்பதியருக்கு இந்த வருடம் தலைதீபாவளி. என்ன ஸ்பெஷல் பிளான் என்ற கேள்வியோடு பேசினோம்.

“கல்யாண வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு. செம்பருத்தி சீரியல் எனக்குனு ஓர் அடையாளத்தையும் அழகான வாழ்க்கை யையும் அமைச்சுக் கொடுத்திருக்கு. சீரியலில் நடிச்சபோது பாரத் எனக்கு பழக்கம். ஆரம்பத்தில் ரெண்டு பேரும் நண்பர்களாதான் இருந்தோம். பாரத் என் மேல ரொம்ப அக்கறையா இருப்பாரு. அதனால நட்பு காதலா மாறிடுச்சு. யார் காதலை முதலில் சொல்றதுனு சின்ன தயக்கம். தயக்கத்தை உடைச்சு நம்ம ஹீரோ காதலைச் சொல்லிட்டாரு. ஃப்ரீ டைம் கிடைச்சா காரை எடுத்துட்டு ரெண்டு பேரும் லாங் டிரைவ் போவோம். பாரத் திடீர் திடீர்னு சொல்லும் கவிதை டிராவலை இன்னும் அழகானதாக மாத்திடும்” வெட்கம் பரவச் சிரிக்கும் பாரதாவை ரசித்தபடி பேச ஆரம்பிக்கிறார் பாரத்....

பாரத், பாரதா
பாரத், பாரதா

“வெளியில துடுக்குப் பெண்ணா தெரியுற பாரதா, உண்மையில் சென்சிட்டிவ். எதிர்பார்க்காத நேரத்தில் கிஃப்ட்ஸ் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுவாங்க. அவங்களுடைய அன்பு மழையில் சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டு இருக்கேன்”

- பாரத் பேச்சைக் கேட்டு, வெட்கம் கூடுகிறது பாரதாவுக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘ஒரு வருஷம் காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோடு, கல்யாணம் பண்ணிக்கிட் டோம். காதலர் தினத்தோடு ஹனிமூனையும் மணாலியில் கொண்டாடினோம். சென்னை வந்ததிலிருந்து லாக்டௌனில் மாட்டிக்கிட்டோம். வீட்டுக்குள்ளயே இருக்கோமா... காதல் இன்னும் அதிகமாயிருக்கு. சமையல், வீட்டு வேலைகள், என் நடிப்பு சார்ந்த வேலைகள்னு எல்லாத்துக்கும் நிறைய உதவிகள் செய்வாரு. சண்டை போட்டாலும் முதல்ல வந்து சமாதானம் செய்யறது அவர்தான்’’

- கணவர் புகழ்பாடும் பாரதா, தலைதீபாவளி பிளான் சொல்கிறார்.

மணாலியில் ஹனிமூன், திருப்பதியில் தலைதீபாவளி - `செம்பருத்தி’ பாரதா

“நானும் பாரத்தும் சேர்ந்து கொண்டாடப்போற முதல் தீபாவளியாச்சே... சடங்குகள் எல்லாம் இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு எல்லாரும் குடும்பமா சந்திக்கப்போறோம். ஆன்லைன், ஆஃப்லைன் ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுது. புடவைகள், வெஸ்டர்ன் டிரஸ்னு எல்லாம் வாங்கியாச்சு. குடும்பத்தோடு திருப்பதி போறோம். போட்டோ ஷூட், பட்டாசு, ஸ்வீட், டிராவல்னு இந்த வருஷம் செம ஸ்பெஷலா இருக்கப் போகுது”

- மத்தாப்பாய் மலர்கிறார் புதுப் பொண்ணு.