Published:Updated:

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

காதல் கலாட்டா
பிரீமியம் ஸ்டோரி
காதல் கலாட்டா

காதல் வானிலே...

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

காதல் வானிலே...

Published:Updated:
காதல் கலாட்டா
பிரீமியம் ஸ்டோரி
காதல் கலாட்டா

“முரட்டு சிங்கிள்னு டிக்டாக் லாம் பண்ணேன். என்னைப் பார்த்தாலே லவ் பண்றவங்க தெறிச்சு ஓடுவாங்க. இப்போ என் மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குது. நடக்குற எல்லாமே கனவு மாதிரி இருக்கு'’ என்று வெட்கத்தில் சிரிக்கிற சரண்யா துராடிக்கு கல்யாண வயசு வந்திருச்சு...

‘`மாநிறம், தாடி வெச்சிருக்கணும், புத்தகங்கள் பிடிக்கணும், அன்பை வெளிப்படுத்த தெரிஞ்சிருக்கணும் இத்தனை குவாலிட்டியும் இருந்தா லவ் பண்ணலாம்’னு ஒரு இன்டர் வியூவில் ஜாலியா சொன்னேன். அது கடவுளுக்கு கேட்டுருச்சுபோல... அத்தனை குணங் களோடும் ஒருத்தரை எனக்காக அனுப்பி வெச்சுட்டாரு”

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

- சஸ்பென்ஸ் உடைக்கும் சரண்யா, செய்தி வாசிப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கி, பின் சீரியல்களிலும் விளம்பரங்களிலும் வலம் வருபவர். சமூக வலைதளப் பக்கங்களில் தன் வருங்கால கணவர் ராகுல் சுதர்சனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். சரண்யாவுக்கு ராகுல் எழுதும் காதல் கடிதங்களையும் இன்ஸ்டாகிராமில் பலரும் கொண்டாடிவருகிறார்கள். காதலில் சிலாகிக்கும் சரண்யா - ராகுல் ஜோடியை சந்தித்தோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

“ஹீ இஸ் மை மேன்னு சொல்றதைவிட என்னோட இன்னோர் அம்மானு சொன்னா சரியா இருக்கும்” என்று ராகுலை அறிமுகம் செய்கிறார் சரண்யா. ``ராகுல் பிசினஸ் ஆலோசகர், கல்வியாளர்னு ரொம்ப பிஸி. இன்ஜினீயரிங் படிச்சிருக்காரு. நண்பர் மூலமாக ராகுல் எனக்கு அறிமுகம் ஆனார். டிராவல், வாசிப்புனு ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள். சீரியல், விளம்பரம்னு மக்கள்கிட்ட நான் அறிமுகம் ஆகியிருந்த நேரம். ராகுல் என்னை டிவி-யில் பார்த்திருப்பாருன்னு நினைச்சுட்டு நான் என் கரியர் பத்தி பேச ஆரம்பிச்சேன். ரொம்ப சைலன்ட்டா ‘ஓ சீரியல் பண்றீங்களா’ன்னு கேட்டாரு. கொஞ்சம் ஷேமாதான் இருந்துச்சு. ‘அட, என்னைத் தெரியாதா... நெக்ஸ்ட் டைம் விளம்பரங்கள் வந்தா பாருங்க’னு சொல்லி சமாளிச்சுட்டேன். ஒரு நாள் போன் பண்ணி, ‘நான் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு முன்னாடி ஒரு பஸ்ஸில் காபி விளம்பரம் இருக்கு. அதுல மாடலாக இருக்கிறது நீங்க தானா’னு கேட்டார். மீடியா அடையாளங்கள் தவிர்த்து என்கிட்ட பழகின ராகுலை ரொம்ப பிடிச்சது. அப்பகூட இது காதல்னு நான் உணரலை’’ என்று படபடப்பவர், காதல் உணர்ந்த அந்தத் தருணத்தைப் பகிர்கிறார்.

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

‘‘ஒரு நாள் சீரியல் ஷூட்டிங்... காலையிலிருந்து பயங்கர மூட் ஆஃப். ஷூட்டிங்கிலிருந்து பாதியில் போக முடியாத காரணத்தால் வேற வழியில்லாமல் நடிச் சுட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கார் புழுதி பறக்க வந்து நின்னது. உள்ளே ராகுல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘நீ நடிச்சு முடி. நான் இங்கேயே இருக்கேன்’னு சொல்லி எனக்காக ஒரு நாள் முழுக்க வெயிலில் உட்கார்ந்து இருந்தார். அந்த நிமிஷம்தான் மனசுக்குள்ள பல்பு எரிஞ்சுது. முரட்டு சிங்கிளா இருந்த நான், காதலில் விழுந்துட்டேன்''

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

- சரண்யா மீண்டும் வெட்கப்பட ராகுல் பேச ஆரம்பித்தார்...

“சரண்யா ரொம்ப போல்டான பொண்ணு.ரொம்ப இயல்பா இருப்பாங்க. அவங்க குணங்கள் பிடிச்சதால காதலிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் காதலைச் சொன் னோம். நாளுக்கு நாள் அவங்க மீதான அன்பும் மதிப்பும் அதிகரிச்சுட்டே போகுது'' என்ற ராகுலிடம் சமூக வலைதளங்களில் அவர் சரண்யாவுக்காக எழுதும் காதல் கடிதங்கள் பற்றிக் கேட்டோம்.

“இப்போ எல்லாருமே வாட்ஸ்அப் மூலமா காதலைச் சொல்லிக்கிறாங்க. ஆனா, கடிதம் வேறு மாதிரியான உணர்வுகளைத் தரும். அதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நம்ம பார்ட்னருக்கான பரிசு. ஆயிரக்கணக்கில் பணம் செலவழிச்சு வாங்கிக் கொடுக்கும் கிப்ஃட் தராத உணர்வை ஒரு கடிதம் கொடுக்கும். அதுமட்டுமல்ல என்னோட அன்பை கடிதத்தின் மூலமா சொல்றதில் எனக்கு ஒரு சந்தோஷம் இருக்கு. வாழ்நாள் முழுக்க கடிதம் எழுதிட்டே இருக்க நான் தயார்” என்று உருகுகிறார்.

முரட்டு சிங்கிள், லவ் லெட்டர், கடலுக்கடியில் நிச்சயதார்த்தம்... சரண்யாவின் காதல் கலாட்டா

``ரெண்டு பேரும் நிறைய டிராவல் பண்றோம். போட்டோ ஷூட் பண்றோம். நிறைய நிறைய காதல் பண்றோம். லைஃப் ரொம்ப ஜாலியா போகுது’' என்ற சரண்யாவிடம் திருமண தேதி கேட்டோம்.

‘`மைனஸ் 2 டிகிரி குளிர் தண்ணீருக்கு அடியில் சுறா, திருக்கை மீன்கள் நடுவில இயற்கையை சாட்சியா வெச்சு ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கிட்டோம். திருமணத்துக்காக ரெண்டு பேர் வீட்டிலும் பேசிருக்கோம். க்ரீன் சிக்னலுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கோம். கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லிட்டுதான் கல்யாணம் பண்ணுவோம். அன்பை கொட்டிக்கொடுக்கும் மக்களோட ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம்”

- காதலோடு காத்திருப் போருக்கு இப்போதே சொல்லிவைப்போம், திருமண வாழ்த்துகளை!