தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கனவைக் கலைக்கும் அரசியல்... இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே
பிரீமியம் ஸ்டோரி
News
இதயத்தை திருடாதே

கலர்ஸ் மராத்தியில் ஹிட்டடித்த `ஜிவ் ஜலா ஏடே பிசா' தொடரை கலர்ஸ் தமிழ் ரீமேக் செய்திருக்கிறது.

சீரியல்களுக்கான வழக்கமான ஃபார்முலாக் களிலிருந்து விலகி, புதிய கதைக் களங்களால் ரசிகர்களின் மனம் கவர்ந்துவரும் `கலர்ஸ்' தமிழ் தொலைக்காட்சியின் அடுத்த புதுமை `இதயத்தை திருடாதே'. அரசியல் ஆதாயத்துக்காகத் `திருமணம்' எனும் பெயரில் பகடைக்காயாக்கப்படும் இருவரின் கதைதான் இந்த `இதயத்தை திருடாதே'.

இதயத்தை திருடாதே
இதயத்தை திருடாதே

பலரின் மனங்களில் திருமணம் குறித்தான கனவுகளும் ஆசைகளும் பெரிதாக இருக்கும். அப்படி, திருமணம் பற்றிய தன் பெரிய கனவுகள் நிஜத்தில் நிகழ்ந்திட காத்திருக்கும் பெண் சஹானா. அவளின் கனவை, அரசியல் எப்படி கலைத்துக் கலங்கடிக்கிறது என்பதைப் பல திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் கலந்து சொல்ல வருகிறது `இதயத்தை திருடாதே'.

கும்பகோணத்தில், ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரின் மகளான சஹானா, படித்தவள், பல மொழிகள் கற்றவள், கலைகள் பல அறிந்தவள், புத்திசாலி, அழகானவள். வாழ்க்கையில் பெரும் லட்சியங்களோடு பயணித்துவரும் சஹானாவுக்கு அப்படியே நேரெதிர் சிவா. படிக்காத முரடன். ஆனாலும் நல்லவன். அந்த ஊரில் எம்.எல்.ஏ-வான தாட்சாயிணிக்கு அவனே வலக்கரம்.

இதயத்தை திருடாதே
இதயத்தை திருடாதே

தாட்சாயிணியைத் தன் அம்மாவாக நினைத்து அவர்மீது, மரியாதையும் அன்பும் அள்ளி வழங்கி விஸ்வாசம் காட்டுகிறான் சிவா. தாட்சாயிணியோ, சிவாவைத் தன் சுயலாபத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.

ஒவ்வொருமுறை சஹானாவும் சிவாவும் சந்தித்துக்கொள்ளும்போதும் அவர்களுக்குள் ஏற்படுகிறது மோதல். ஏனோ, விதியின் விளையாட்டால் சஹானாவின் பார்வைக்கு எப்போதும் முரடனாகவே தெரிகிறான் சிவா. சஹானாவுக்கு அவள் காதலித்தவனோடு நிச்சயம் முடிக்கப்பட்டுத் திருமணம் நடைபெற இருக்கிறது. அப்போது நடக்கும் ஒரு தவறான புரிதலால், சஹானாவுக்கும் சிவாவுக்கும் இடையில் பெரிய பிரச்னை ஏற்பட, கோபத்தில் திருமணத்துக்கு முதல்நாள் இரவு, சஹானாவை சிவா கடத்துகிறான். திருமணம் நின்றுபோகிறது.

இந்த விஷயத்தால் ஊரே பரபரப்பாக, அப்போது சஹானாவுக்கு உதவி செய்வதுபோல் காட்டிக்கொண்டு தனக்கான ஆதாயத்தை அடைய முயற்சி செய்கிறான் முன்னாள் எம்.எல்.ஏ-வும் தாட்சாயிணியின் எதிரியுமான வானவராயன்.

வானவராயன் செய்யும் சூழ்ச்சி யால் சஹானாவுக்கும் சிவாவுக்கும் விருப்பமின்றி திருமணம் நடைபெறுகிறது. இதற்கிடையில் அரசியல் சூழ்ச்சிகளும், அதிரடியான திருப்பங்களும் நிகழ, இருவரின் திருமண வாழ்க்கை என்னவாகிறது... தாட்சாயிணி - வானவராயன் பகை என்னவானது... போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது `இதயத்தை திருடாதே'.

`மாயவன்', `பட்டாஸ்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நவீன் இதில் நாயகனாக நடிக்கிறார். இதுதான் இவருக்கு சின்னத்திரையின் முதல் சீரியல். சஹானாவாக, புதுமுகம் ஹீமா பிந்து நடிக்கிறார். கலர்ஸ் தமிழில் 'சிவகாமி' தொடரில் வில்லியாக நடித்த நிலானி, இதில் தாட்சாயிணியாக நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த பவன், இந்தத் தொடரை இயக்குகிறார்.

கலர்ஸ் மராத்தியில் ஹிட்டடித்த `ஜிவ் ஜலா ஏடே பிசா' தொடரை கலர்ஸ் தமிழ் ரீமேக் செய்திருக்கிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `இதயத்தை திருடாதே' சீரியலைக் காணலாம்!