Published:Updated:

விகடன் TV: ‘ஷிவானியிடம் பழகும்போது எனக்கு அப்படித் தோணலை!’

பாலாஜி முருகதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலாஜி முருகதாஸ்

எனக்கு அதைப் பார்க்கறதுல விருப்பமில்லை. நான் அங்க என்ன பண்ணினேனோ அதைத்தானே காட்டியிருக்கப் போறாங்க.

டந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பாலாஜி முருகதாஸ் என்கிற பெயர் யாருக்கும் தெரியாது. ‘பிக் பாஸ்’ ஷோவில் இவர் நுழைந்தபோதுகூட ‘‘யாருப்பா இந்தப் பையன்... கொஞ்சம் உர்ர்னு இருக்கானே, எத்தனை நாள் தாக்குப் பிடிப்பான்’ என்றே கேட்டார்கள் சிலர். ஆனால், ஷிவானியைச் சுற்றிச் சுற்றி வந்தது, சிலருடன் சண்டை போட்டு மைக்கையெல்லாம் கழற்றி எறிந்தது என ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து நூறு நாள்களைக் கடந்ததுடன், நிகழ்ச்சியில் இரண்டாமிடத்தையும் பிடித்த பாலாஜிக்கு வாழ்த்துகள் சொல்லிப் பேசினேன்.

``முதல் பேட்டி இது. பாலா யாரு?’’

‘`அம்மா அப்பாவுக்குப் பூர்வீகம் தேனி. ஆனா நான் பிறந்தப்ப எங்க குடும்பம் சென்னைக்கு வந்திடுச்சு. நான், அண்ணன்னு ரெண்டு பசங்க. அப்பா சென்னையில ஹோட்டல்ல `குக்’கா இருந்தார். அம்மா மலேஷியாவுல என்னுடைய சித்தி நடத்திட்டு வந்த பியூட்டி பார்லர்ல வேலை பார்த்தாங்க.’’

``பிக் பாஸ் ஷோவுக்குள் ஏன், எப்படி வந்தீங்க?’’

‘‘எல்லாருக்குமே `நம்மை எல்லாரும் கவனிக்கணும்’ங்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். எனக்கும் இருந்தது. அதுவுமேகூட எதுக்கு வந்ததுன்னா, ‘மிஸ்டர் இந்தியா’வெல்லாம் ஆன பிறகு ‘குரூமிங் இன்ஸ்டிட்யூட்’ தொடங்கலாம்கிற ஒரு எண்ணம் வந்தது. நம்மை எப்படி ஸ்டைலா வெச்சுக்கறது, பாடி லாங்க்வேஜ், ஹேர் ஸ்டைல் போன்ற வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் தன்னம்பிக்கையுடன் செயல்பட என்ன செய்யணும்கிறதுக்கு டிரெய்னிங் தர்ற இன்ஸ்டிட்யூட்டா அது இருக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னை நாலு பேருக்குத் தெரிஞ்சாதானே என் இன்ஸ்டிட்யூட்டுக்கு வருவாங்க? நம்மை மக்கள்கிட்ட நல்லாவே கொண்டு போகிற நிகழ்ச்சியா ‘பிக் பாஸை’ நான் பார்த்தேன். அதனால ரெண்டாவது சீசன்ல இருந்தே கவனிச்சுட்டு வந்தேன். ஷெரின் அம்மா எனக்கு ஃபேஸ்புக் ஃப்ரெண்ட். அவங்க என்னைப் பத்தின டீடெய்ல சேனலுக்கு அனுப்பி வைக்கச் சொன்னாங்க. அப்படிக் கிடைச்சதுதான் இந்த வாய்ப்பு.’’

விகடன் TV: ‘ஷிவானியிடம் பழகும்போது எனக்கு அப்படித் தோணலை!’

``பிக் பாஸ் வீட்டுக்குள் போனதுமே ‘இவங்கெல்லாம் நமக்கு செட் ஆக மாட்டாங்க’ன்னு யார் யாரை முடிவு செய்தீங்க?’’

‘‘இந்த கேமை நல்லபடியா விளையாடணும்னு நினைச்சிட்டுதான் நான் ஷோவுக்குள் போனேன். என்னை மாதிரியே ஷோவை விளையாட்டா நினைச்சுச் செயல்பட்டவங்க கூட நல்லா பேசினேன். அப்படிப் பண்ணாதவங்ககிட்ட நான் சேரல. மத்தபடி யார் கூடயும் பர்சனலா எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை. நான் சத்தமாப் பேசறேன், திமிராத் திரியறேன்னு சிலர் பேசினதா கேள்விப்பட்டேன். என்னுடைய பாடி லாங்வேஜ், என்னுடைய இயல்பான குணத்தையெல்லாம் நான் மத்தவங்களுக்காக மாத்திக்க முடியுமா? அப்படி மாத்தறதும் சரியானதில்லையே.”

விகடன் TV: ‘ஷிவானியிடம் பழகும்போது எனக்கு அப்படித் தோணலை!’

``ஷிவானியைச் சுத்திச் சுத்தி வந்தீங்களே, ஷிவானியை நிஜத்துலயே லவ் பண்றீங்களா? அல்லது கன்டென்டுக்காக அப்படிப் பண்ணுனீங்களா?’’

‘‘ஒரு தடவை லவ் ஃபெயிலியர் ஆனவன்கிட்ட கேக்கற கேள்வியா சார் இது? ஆனாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்றேன். ஷோவுல ஒரு நாள் நான் காலையில எழுந்ததும் சோகமா ஃபீல் பண்ணிட்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்திருப்பீங்க. அப்ப அங்க மத்த யாருமே எங்கிட்ட வந்து என்ன ஏதுன்னு கேக்கலை. ஷிவானிதான் வந்து அக்கறையாப் பேசினாங்க. அந்த அக்கறை எனக்குப் பிடிச்சிருந்தது. என் மேல அன்பா இருக்கிறவங்ககிட்ட நானும் அன்பாதானே இருக்கணும். ஷிவானி போலவே கேப்ரியும் என்மீது பாசமாத்தான் இருந்தாங்க. ஆனா அவங்ககிட்ட பழகறப்ப ஒரு தங்கச்சி ஃபீல் இருந்தது. ஆனா ஷிவானியிடம் பழகறப்ப தங்கச்சி ஃபீல் எனக்கு வரலை. அவ்ளோதான் சொல்வேன். மத்தபடி கன்டென்டுக்காக ஷிவானி கூடப் பழகுனேங்கிறதெல்லாம் என்னைப் பத்தி எதிர்மறையாப் பேசறவங்க சொல்றது.’’

விகடன் TV: ‘ஷிவானியிடம் பழகும்போது எனக்கு அப்படித் தோணலை!’

``வெளியில் வந்ததும் பிக்பாஸ் எபிசோடுகளைப் பார்த்தீங்களா?’’

‘‘எனக்கு அதைப் பார்க்கறதுல விருப்பமில்லை. நான் அங்க என்ன பண்ணினேனோ அதைத்தானே காட்டியிருக்கப் போறாங்க. அதைத் திரும்பவும் பார்த்தா போர் அடிக்கும் சார்.’’

``சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கா? அடுத்து என்ன திட்டம்?’’

‘‘நான் சினிமாவைக் குறிவெச்சு பிக் பாஸ் வரலை. ஆனா இப்ப சிலர் பேசத் தொடங்கியிருக்காங்க. பார்க்கலாம்... கதையும் கதாபாத்திரமும் எனக்குப் பிடிச்சு செட் ஆச்சுன்னா பண்ணலாமே!’’