சினிமா
Published:Updated:

விகடன் TV: “எச்சரிக்கையுணர்வு இப்ப வந்திருக்கு!”

லியோனி
பிரீமியம் ஸ்டோரி
News
லியோனி

மதியத்துக்கு மேல பூஜை. நான் காலையிலேயே போயிட்டேன். போனா அங்க ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலின் பூஜை. ‘இது என்ன ஃபங்ஷன்’னு கேட்டேன்.

“பட்டிமன்ற மேடையும் அங்க ஒலிச்ச என் குரலும்தான் பட்டிதொட்டியெங்கும் என்னைப் பிரபலப்படுத்துச்சு. இப்பப் பாருங்க... ஒரு மேடையும் அங்க நான் பேசினதும்தான் தேவயானி கூட என்னை நடிக்க வச்சிருக்கு. ‘இந்தாளு என்னய்யா, பெரிய கட்சியில கொ.ப.செ.வா இருக்காரு, ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்கள்ல பேசியிருக்காரு, ஆனா, தேவயானிகூட நடிக்கறதைப் பெரிசா சொல்றாரே’ன்னு கேட்டுடாதீங்க. விக்கிரவாண்டி பக்கத்துல பிரசாரத்துக்குப் போயிருந்தப்ப ஒரு செகண்ட் விக்கித்துப்போயிட்டேன். மைக்கைப் பிடிச்சுப் பேசத் தொடங்கினப்ப கூட்டத்துல இருந்து ஒரு அம்மா ‘தேவயானி மாமனாருல்ல’னுச்சே பார்க்கலாம்! இதுக்கு மேல என்ன சொல்வீங்க?’’

லியோனி
லியோனி

தன் இயல்பான நகைச்சுவையுடன் பேசத் தொடங்கிய திண்டுக்கல் லியோனி. ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் கமிட் ஆன பின்னணியே சுவாரஸ்யம்தான். ‘‘ ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவும் நானும் திண்டுக்கல்ல ஒண்ணாப் படிச்சவங்க. அவர்கிட்ட, என் மகனை ஹீரோவாக்கி ஒரு படம் எடுக்கக் கேட்டிருந்தேன். அவரும் சரின்னு சொல்ல ‘அழகிய கண்ணே’ங்கிற அந்தப் படம் தயாராகிட்டிருக்கு. அந்தப் படத்தின் பூஜைக்குக் கூப்பிட்டிருந்தார்.

மதியத்துக்கு மேல பூஜை. நான் காலையிலேயே போயிட்டேன். போனா அங்க ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலின் பூஜை. ‘இது என்ன ஃபங்ஷன்’னு கேட்டேன். ‘இந்த சீரியலையும் நான்தான் தயாரிக்கேன். இதையும் வாழ்த்தி ரெண்டு வார்த்தை பேசுங்களேன்’னார் பிரிட்டோ.

விகடன் TV: “எச்சரிக்கையுணர்வு இப்ப வந்திருக்கு!”

‘காலங்காலமா சீரியல்களைக் கேலி பேசியே பழகின வாய்க்கு வந்த சோதனையா’ன்னு நினைச்சுக்கிட்டு, பேசினேன். என் பேச்சைக் கேட்டுட்டே இருந்த சீரியலின் இயக்குநர் பிரியன், நிகழ்ச்சி முடியறப்ப மைக்கைப் பிடிச்சு, ‘இந்த சீரியல்ல முக்கியமான ஒரு தாத்தா வேடத்துக்கு நாங்களும் நிறைய ஆடிஷன் பண்ணிட்டோம். திருப்தியா இல்ல. ஆனா இப்போ லியோனி சார்தான் அந்த கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பார்னு தோணுது. அதனால அவரை கமிட் செய்துடலாம்னு இருக்கோம்’னு சொல்லிட்டார். பிறகென்ன, கல்யாண வீடுகள்ல சாப்பிட வந்தவனுக்கு எப்பவாச்சும் தாலி கட்டற யோகம் அடிக்கும் பாருங்க, அப்படிக் கிடைச்ச வாய்ப்புதாங்க’’ என்கிறார்.

‘பிரசார மேடையில பெண்களைத் தப்பாப் பேசினீங்க’ன்னு எனக் கேட்டு முடிக்கும் முன்பாகவே குறுக்கிட்டு, ‘‘என் பேரே வாய்க்குள் வராத சூழல்லயும் எப்படியோ உச்சரிச்சு பிரதம மந்திரி பேசினதைத்தானே கேக்கறீங்க? பட்டிமன்ற மேடைகள்ல பேசற‌தைத்தான் பேசினேன். புதுசா ‘இன்னைக்கு இவ்ளோ மணி நேரமாச்சும் ஆபாசமாப் பேசிடணும்ப்பா’ன்னு டிரெயினிங் எடுத்துட்டுப் பேசின மாதிரி பில்டப் கொடுத்து, பாவம் அந்த மனுஷனையும் என் பேரை உச்சரிக்கச் சிரமப்பட வச்சிட்டாங்க. என் பட்டிமன்றப் பேச்சுகளுக்கு ஆண்களுக்கு நிகரா பெண் ரசிகர்களும் இருக்காங்கன்னு பாவம் பிரதமருக்குத் தெரியாது. இருந்தாலும் பார்த்துப் பேசணும்கிற எச்சரிக்கை உணர்வு இப்ப வந்திருக்கு’’ என்றார் லியோனி.