Published:Updated:

விகடன் TV: “நடிக்கத் தெரியலைன்னு என் காதுபடவே பேசினாங்க!”

ஹிமா பிந்து
பிரீமியம் ஸ்டோரி
ஹிமா பிந்து

கலர்ஸ் சேனல்ல ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலுக்கு ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டாலும் ஆரம்ப கால ஷூட்டிங் நாள்கள் ரொம்பவே கஷ்டமா இருந்தது.

விகடன் TV: “நடிக்கத் தெரியலைன்னு என் காதுபடவே பேசினாங்க!”

கலர்ஸ் சேனல்ல ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலுக்கு ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டாலும் ஆரம்ப கால ஷூட்டிங் நாள்கள் ரொம்பவே கஷ்டமா இருந்தது.

Published:Updated:
ஹிமா பிந்து
பிரீமியம் ஸ்டோரி
ஹிமா பிந்து
‘`பிமாவரத்துப் பொண்ணுங்க ஹிமா பிந்து (விஜயவாடா அருகில் இருக்கிறதாம் பிமாவரம்). ஸ்கூல் படிச்சது ஆந்திராவுலதான். ஆனா ஃபேமிலி ஏற்கெனவே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகியிருந்தது. சினிமாவுல முதல் என்ட்ரி காலேஜ் படிச்சிட்டிருக்கிறப்ப கிடைச்சது. ‘ஐஆர் 8’ங்கிற படத்துல நான் ஹீரோயின். நீங்க படம் பார்த்தீங்களா?’’மனதில் உள்ளதைப் படபட பட்டாசாகப் பொரிகிறார் பிந்து.
ஹிமா பிந்து
ஹிமா பிந்து

‘`படத்தை விடுங்க, உங்க முதல் சீரியலே இங்க ஹிட் ஆகிடுச்சு. அதுவும் லவ் ஸ்டோரியில ஒரு வருஷம் கடந்திருக்கீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’

`` கலர்ஸ் சேனல்ல ‘இதயத்தைத் திருடாதே’ சீரியலுக்கு ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டாலும் ஆரம்ப கால ஷூட்டிங் நாள்கள் ரொம்பவே கஷ்டமா இருந்தது. என் காதுபடவே ‘நடிக்கத் தெரியலை’ன்னு பேசினாங்க.

அப்ப பேஷன் டிசைனிங் படிச்சிருந்தேன். பேசாம அந்த ரூட்லயே போயிடலாமான்னு நிறைய தடவை தோணுச்சு. வீட்டுக்கு ஒரே பொண்ணு. அதனால என் விருப்பத்துக்கு பேரன்ட்ஸ் பச்சைக்கொடி காட்டிட்டாங்க. ‘ஆக்டிங் பிடிச்சிருக்குதானே, அப்படின்னா, எதையும் காதுல வாங்கிக்காம ட்ரை பண்ணு’ன்னு என்கரேஜ் பண்ணினாங்க.

அப்பா ஏற்கெனவே காஸ்டிங் டைரக்டரா சினிமாவுல இருந்தவர். அதனால ‘இதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்திடணும்’னு சொல்லியே ஊக்கப்படுத்தினார். ஆனாலும் கூட மூணு மாசம் வரைக்கும் திக் திக்னுதான் போச்சு.

அதுலயும் ஐம்பதாவது எபிசோடு நெருங்கின சமயம், ஒருநாள் காலையில ஷூட்டிங் வந்தா ‘சீரியல்ல ஹீரோயின் மாறப் போறாங்க’ன்னு குசுகுசுன்னு சிலர் பேசறாங்க. ஆனா டைரக்டர் ராதாகிருஷ்ணன் சார் ‘உங்களுக்கு என்ன வருதோ அதைச் செய்யுங்க, நாம பாத்துக்கலாம்’னு நம்பிக்கை கொடுத்தார். ஒருவழியா அந்த நாள்களைக் கடந்து இன்னைக்கு எங்க சேனல்ல நம்பர் ஒன் சீரியல்ல நடிச்சிட்டிருக்கேன். சினிமா தராத புகழை சீரியல் தந்திருக்கு’’ என்றவரிடம்,

ஹிமா பிந்து
ஹிமா பிந்து

‘`நவீனும் (தொடரின் ஹீரோ) நீங்களும் நிஜத்திலேயே காதலிப்பதாகப் பேசுகிறார்களே’’ என்றால்,

“தமிழ் சீரியல் ரசிகர்கள் ஜோடியா நடிச்சா, நிஜ வாழ்க்கையில சேர்த்து வச்சிடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதனால நான் கொஞ்சம் உஷாராத்தான் இருக்கேன். ஆனா ரசிகர்கள் சில சமயங்கள்ல நமக்கு மேல கில்லாடிகளா இருக்காங்க. ‘உங்க அப்பாவும் நவீனுடைய அப்பாவும்கூட சினிமாக்காரங்கதானாமே, அதுலகூட உங்களுக்குள் ஒற்றுமையா’ன்னு எல்லாம் கேக்கறாங்க. 24 மணி நேரம் தங்களுடைய அபிமான ஆர்ட்டிஸ்டுகள் பத்தி சர்ச் பண்ணிட்டே இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனா உங்க கேள்விக்கு என் பதில் இதுதான், எங்களுக்கிடையில கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகப் போய்த்தானே ஒரு வருஷம் சீரியல் சக்சஸ்ஃபுல்லா போயிட்டிருக்கு. நான் சீரியல்ல சொன்னேன்’’ என்கிறார்.

பார்ப்போம்... பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism